Aran Sei

வீடியோகான் நிறுவனத்திற்கு 61 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி – மிகக்குறைந்த விலைக்கு வாங்கிய வேதாந்தா நிறுவனம்

வீடியோகான் குழுமம் பொதுத்துறை வங்கிகளுக்கு தர வேண்டிய கடனில் 95 சதவீதம், திவால் சட்டத்தின் (Insolvency and Bankruptcy Code)  கீழ் தள்ளுபடி செய்யப்பட்டள்ளது.

வீடியோகான் குழுமத்தின் இரண்டு நிறுவனங்கள் (வீடியோகான் இண்டிஸ்ட்ரிஸ் லிமிடட் மற்றும் வேல்யூஸ் இண்டஸ்ட்ரிஸ் லிமிடட்) பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனை கட்டாமல் இருந்த சூழலில், அவை திவாலாகி இருப்பதாக, தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் (NCLT) அறிவித்தது. இந்த இரண்டு நிறுவனங்களும் 64,838 கோடி ரூபாய் வங்கிகளுக்கு திரும்ப செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் வேதாந்தா குழுமம், 2,962 கோடி ரூபாய்க்கு வீடியோகன் நிறுவனத்தை வாங்கியுள்ளது. இதன் மூலம் வீடியோகான் நிறுவனத்துக்கு 61,876 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஜகமே தந்திரம்; திரைப்பிரதியும் அதன் பின்னணி அரசியலும் – முகமது இல்யாஸ்

இதேபோல், சிவா இன்டஸ்ட்டீஸ் என்ற நிறுவனம் வங்கிகளுக்கு 4,863 கோடி ரூபாய் தர வேண்டிய நிலையில், அந்த நிறுவனத்தை வெறும் 318 கோடி ரூபாய்க்கு விற்க தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அதுவும், அந்த 318 கோடியில் பொதுத்துறை வங்கிகளுக்கு முதல் தவணையாக 5 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கும் என்றும், 6 மாதத்திற்குப் பிறகே மிதும் 313 கோடி ரூபாய் கிடைக்கும் என்றும் டிஎன்ஏ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு, திவால் சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து (நான்கு ஆண்டுகளில்), 363 நிறுவனங்களுக்குக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நான்கு ஆண்டுகளில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சராசரியாக 80% கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக பெஸ்ட் டாப் இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தி கூறுகிறது.

‘திருநங்கைகளுக்கு அரசு வேலைகளில் 1% இட ஒதுக்கீடு’ : சட்ட வரைவை முன்மொழிந்த கர்நாடக அரசு

பெருநிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனில் இருந்து அதிகபட்சமாக சியோன் ஸ்டீல் நிறுவனத்துக்கு  99% கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாகவும், டெக்கான் க்ரானிக்கல் நிறுவனத்துக்கு 95% கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாகம், உஷ்தேவ் இண்டர்நேஷனல் நிறுவனத்துக்கு 94% கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாகவும், லேன்கோ இன்ஃப்ரா நிறுவனத்துக்கு 88% கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

எஸ்ஸார் ஸ்டீல் எனும் நிறுவனத்துக்கு பொதுத்துறை வங்கிகள் வழங்கிய 49,000 கோடி ரூபாய் கடனில் இருந்து, 92 சதவீதத்தை மீட்டதே, இதுவரை வங்கிகள் அதிகபட்சமாக மீட்ட தொகையாகும் என்று பெஸ்ட் டாப் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வீடியோகான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட கடனில் இருந்து 95.85% கடனை தள்ளுபடி செய்து, அந்நிறுவனத்தை வேதாந்தா குழுமம் வாங்குவதற்கு என்சிஎல்டி ஒப்புதல் வழங்க்கியுள்ளது.

‘கடலில் திசைமாறியதால் சிறையில் கைதியானோம்’ : திருச்சி சிறையிலுள்ள ஈழத்தமிழர்கள் தங்களை விடுதலை செய்யக் கோரி போராட்டம்

இந்தச் சூழலில், பெருநிறுவனங்கள் திவால் என அறிவிப்பதும், அதன் தொடர்ச்சியாக அவர்கள் வாங்கிய கடனில் பெரும் அளவு தள்ளுபடி செய்யப்படுவதும் குறித்து அரண்செய் –யிடம் பேசிய, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர், சி.எச்.வெங்கடாச்சலம், ”மக்கள் கடுமையாக உழைத்து, சேமித்து வைத்திருக்கும் 152 லட்சம் கோடி ரூபாய் பணம் தற்போது வங்கிகளிடம் உள்ளது. இந்த பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்த பணத்தை கடனாக கல்வி, விவசாயம், பெண்கள் முன்னேற்றம், கிராமப்புற வளர்ச்சி, கட்டுமானம், சுகாதாரம், மருத்துவமனை உள்ளிட்டவைகளுக்கு வழங்க வேண்டும். ஆனால் இந்த பணம் பெருமுதலாளிகளுக்கு கடனாக கொடுக்கப்பட்டு மீட்கப்படாமல் உள்ளது. இவ்வளவு கடன் தள்ளுபடி செய்தும் பெருநிறுவனங்கள் இன்னும் 8 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு திருப்பி தர வேண்டும், இந்த கடனில் இருந்து 10 சதவீத்தை மீட்டெடுத்தால் கூட மக்களுக்கு இலவசமாக எவ்வளவு தடுப்பூசியை போட முடியும் என்பதை யூகித்து பாருங்கள்” என்று கூறினார்.

மேலும், ”இந்த வராக் கடனால், பொதுமக்கள் வங்கிகளில் செலுத்தும் பணத்துக்கு வட்டி விகித்தத்தை குறைத்து, சேவைக் கட்டணங்களை உயர்த்தி, ஏடிஎம் பரிவர்த்தனைக்கு விலை செய்தால் வரி விதித்து அரசு மக்களையே மீண்டும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்” எனவும் ”இதன் மூலம் மக்களுக்கு பாதிப்பு, மக்கள் பணத்தை கடனாக பெற்று திருப்பி செலுத்ததாக முதலாளிகளுக்கு சலுகை” எனவும் தெரிவித்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்