Aran Sei

‘சக்திவாய்ந்த தென்னிந்தியாவை நாட்டின் பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்’ – குடியரசுத் துணைத் தலைவர் அறிவுறுத்தல்

தென்னிந்தியாவின் ஆறு மாநிலங்கள் சக்தி வாய்ந்தவை என்றும் நாட்டின் மற்ற மாநிலங்கள் இவற்றை பின்பற்ற வேண்டும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

நேற்று (செப்டம்பர் 23), ‘2025 ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய தென்னிந்தியாவின் பயணம்’ என்ற தலைப்பில் இந்தியத் தொழிற்சாலை கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்து  எம். வெங்கையா நாயுடு உரையாற்றியுள்ளார்.

அப்போது, சேவைகள், நவீன காலத்திற்கு ஏற்றப் பண்பாட்டு விழுமியங்கள், கல்வி மற்றும் கல்விசார் திறன்கள், கடல்சார், நகரமயமாக்கல் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் பெற்றுள்ள வலிமை, வாழ்க்கை மற்றும் அதன் பண்பாட்டு தரம் போன்றவை தென்னிந்திய மாநிலங்களில் மிகப்பெரிய பலங்களாகும். இவை மென்மையான சக்தியாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.

தென்னிந்தியாவில் மாநிலங்களவை தொகுதிகளை குறைக்க பாஜக திட்டம் – சசி தரூர் குற்றச்சாட்டு

“தென்னிந்தியாவின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பது,  போட்டித்தன்மையை வளர்க்கும் அதன் திறன். ஒவ்வொரு மாநிலமும் அதன் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல அதற்கே உரிய சிறந்த துறையைக் கண்டுக்கொள்ள வேண்டும். இந்தியா செழிப்பான நிலையை நோக்கிய பயணத்தில் ஒரு தீர்க்கமான கட்டத்தில் உள்ளது. உற்பத்தி, விவசாய ஏற்றுமதி மற்றும் டிஜிட்டல் சேவைகளில் இந்தியாவிற்கும் இதர உலக நாடுகளுக்கும் சேவையாற்றும் உலகளாவிய மையங்களை நாம் இந்தியாவில் உருவாக்க வேண்டும்.” என்று எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

2018 ஆம் ஆண்டில் ஜிடிபியில் பெரிய நிறுவனங்களின் வருவாய் பங்களிப்பு 48 விழுக்காடாக இருந்தது என்றும் 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியா 70 விழுக்காட்டை எட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source: New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்