Aran Sei

வேலைவாய்ப்பு விகிதம் குறைந்துள்ளது: கொண்டாடப்பட வேண்டியதா?

credit: dnaindia.com

கஸ்ட் மாதத்தைக் காட்டிலும் செப்டம்பர் மாதத்தில் வேலைவாய்ப்பின்மையின் அளவு குறைந்துள்ளது. ஆனால், இதில் கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை என்று இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (CMIE) தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு நாடு தழுவிய பொது முடக்கம் நடைமுறை செய்யப்பட்டது. இதன் காரணமாக ஏப்ரல் மாதத்திலிருந்து வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்த வண்ணம் இருந்தது. ஏப்ரல் மாதத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 23.52 விழுக்காடாக இருந்தது. மே மாதம் இது 21.73 விழுக்காடாக இருந்தது என்று சிஎம்ஐஇ கூறியுள்ளது.

ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு இழப்பு விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 8.35 விழுக்காடாக இருந்தது. அது செப்டம்பர் மாதத்தில் 6.67 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்று சிஎம்ஐஇ வெளியிட்டுள்ள தரவின் மூலமாகத் தெரியவருகிறது.

நகர்ப் புறங்களில் ஆகஸ்ட் மாதம் வேலைவாய்ப்பின்மை விகிதம் 9.83 விழுக்காடாக இருந்தது. அது செப்டம்பர் மாதம் 8.45 விழுக்காடாக சற்றே முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்றும் சிஎம்ஐஇ தரவு தெரிவிக்கிறது.

செப்டம்பர் மாதம் வேலைவாய்ப்பின்மை விகிதத்தில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் குறித்து கொண்டாடுவதற்குக் காரணங்கள் இல்லை என்று சிஎம்ஐஇ -யின் முதன்மைச் செயல் அதிகாரி மகேஷ் வியாஸ் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் மாதத்துடன் அல்லது அதற்கு முந்தைய மாதங்களின் வாராந்திரத் தொழிலாளர் சந்தை (weekly labour market) அளவீடுகளைச் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சென்ற மாதத்தில் தொழிலாளர் சந்தைகளின் நிலைமை மோசமடைந்திருப்பது தெரியவருகிறது. பொருளாதார மீட்சி அடையும் வேகம் ஆகஸ்ட் மாதத்திலேயே தேக்கத்தைக் கண்டுள்ளது என்று மகேஷ் வியாஸ் தெரிவித்துள்ளார்.

பொருளாதார மீட்சிக்கான வேகத்தில் ஏற்பட்டுள்ள தேக்கம் என்பது முழுமையாகப் பொருளாதாரம் மீட்சி பெறுவதற்கான சாத்தியங்களைத் தள்ளிவைக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

பொருளாதாரத்தில் வேலையில் ஈடுபடக்கூடிய வயதுடையவர்களின் விகிதம் (labour force participation rate) செப்டம்பர் மாதத்தில் 40.3 விழுக்காடாக இருந்தது. இது ஆகஸ்ட் மாதத்தில் 40.96 விழுக்காடாக இருந்தது. பொருளாதாரத்தில் பணியில் இருப்பவர்கள் மற்றும் வேலைவாய்ப்புகளைத் தேடுபவர்கள் விகிதம் தொடர்ச்சியாக வீழ்ந்துகொண்டு வருகிறது என்றும் மகேஷ் வியாஸ் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரத்தில் வேலையில் ஈடுபடக்கூடிய வயதுடையவர்களின் விகிதம் வீழ்ச்சியடைவது என்பது வேலைவாய்ப்புகளை தேடுபவர்கள் மற்றும் ஏற்கெனவே பணி புரிபவர்களின் எண்ணிக்கை வீழ்ந்துள்ளது என்று இதற்கு அர்த்தமாகும் என்று மிண்ட் நாளேடு தெரிவித்துள்ளது.

பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பில் ஈடுபடக்கூடிய வயதுடையவர்களின் விகிதம் சுருங்குவதென்பது தொழிலாளர் சந்தை சுருக்கிறது என்றும் தொழிலாளர்கள் பணி புரியும் இடங்களில் பணிச்சூழல் மோசமாக இருக்கிறது என்றும் மகேஷ் வியாஸ் தெரிவித்துள்ளர்.

வேலைவாய்ப்பில் ஈடுபடக்கூடிய வயதுடையவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் விகிதம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், செப்டம்பர் மாதம் வேலைவாய்ப்பின் விகிதம் குறைந்திருக்கிறது என்று கூறும் தரவில் அர்த்தம் எதுவுமில்லை என்று மகேஷ் வியாஸ் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தில் வேலைவாய்ப்புகள் மீட்சியடைவதற்குக் குறைந்தபட்சம் ஓராண்டாகும் என்று தொழிலாளர், தொழிலாளர் சந்தை ஆகியவற்றை ஆய்வு செய்யும் பொருளியலாளர்கள் கருத்து கூறியுள்ளனர்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்