Aran Sei

‘பொதுமுடக்கத்தால் 8.9 கோடி இந்தியர்கள் கொடிய வறுமைக்கு தள்ளப்படுவர்’ – ஐ.நா. ஆய்வறிக்கை

2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார உற்பத்தி, 2019 ஆம் ஆண்டை விடக் குறைவாக இருக்கும் என்று ஐநாவின் அமைப்பு ஒன்று கணித்துள்ளது. மேலும், கொரோனா பொதுமுடக்கம் 8.9 கோடி மக்களை மீண்டும் கொடிய வறுமைக்குத் தள்ளும் என்றும் எச்சரித்துள்ளது.

பொதுமுடக்கத்திற்குப் பின்னர் ஏற்பட்டுள்ள உணவுத் தட்டுப்பாடு – காரணம் என்ன?

ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூக ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில், இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் உருவாக்கிய பொருளாதார இடையூறுகளானது, 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்த போதிலும், தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தபோதிலும், 2021 ஆம் ஆண்டிற்கான இந்தியப் பொருளாதார உற்பத்தியானது 2019 ஆம் ஆண்டில் இருந்த உற்பத்திநிலைக்கும் கீழே செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று அவ்வறிக்கை கூறியுள்ளது.

பொது முடக்கத்தில் 60 லட்சம் உயர் ஊதிய வேலைகள் இழப்பு

இப்பொதுமுடக்கமானது மேலும் 8.9 கோடி மக்களை மீண்டும் கொடிய வறுமைக்குத் (ஒரு நாளைக்கு ரூ .145 குறைவாக சம்பாதிக்கும் நபர்கள்) தள்ளும் என்று எச்சரிக்கைப்பட்டுள்ளது.

Source : New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்