Aran Sei

தனியார் துறையில் சமூக அநீதி: அதிகரிக்கும் வருமான ஏற்றத்தாழ்வுகள்

credit: time.com

நிஃப்டி 50 நிறுவனங்களில் உயர் பதவி வகிப்பவர்கள் பெறும் ஊதியத்துக்கும் நிரந்தரமான தொழிலாளர்கள் பெறும் சம்பளத்துக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்திருப்பதாக தி வையர் இணையத்தளம் தெரிவிக்கிறது.

ஹீரோ மோட்டார் கார்ப், இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா, பஜாஜ் ஆட்டோ மற்றும் இண்டல்கோ இண்டஸ்டிரிஸ் ஆகிய நிறுவனங்களில் தலைமை பதவி வகிப்பவர்களின் ஊதியம் அந்நிறுவனங்களில் பணிபுரியும் 50 விழுக்காடு நிரந்தர தொழிலாளர்கள் பெறும் சம்பளத்தை விட 500 மடங்கு அதிகமாகும்.

நிஃப்டி 50 நிறுவனங்களில் ஹீரோ மோட்டோகார்ப்-பில் பணிப்புரியும் 50 விழுக்காடு நிரந்தர தொழிலாளர்களைக் காட்டிலும் 752 மடங்கு அதிகமாக தலைமை மேலாண்மை அதிகாரிகள்  ஊதியம் பெறுகின்றனர். ஹீரோ மோட்டோகார்ப்-பின் தலைமை மேலாண்மை அதிகாரி பவன் முஞ்சால் 2019-20-ம் ஆண்டில் ரூ.84.59 கோடி ஊதியம் பெற்றுள்ளர். ஆனால், அந்நிறுவனத்தில் உள்ள 50 விழுக்காடு நிரந்தர தொழிலாளர்கள் வெறும் ரூ.11.25 லட்சம் மட்டுமே ஊதியமாக பெற்றுள்ளனர்.

நிஃப்டி 50 நிறுவனங்களில் மாருதி சுசுகி-யில்தான் குறைவான ஊதிய ஏற்றத்தாழ்வு உள்ளது. அந்நிறுவனத்தில் தலைமை அதிகாரியின் ஊதியம் 39 ஊழியர்கள் பெறும் ஊதியத்துக்கு சமமாக உள்ளது.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பெரும் லாபங்களை ஈட்டக்கூடிய நிறுவனங்கள், தலைமை மேலாண்மை அதிகாரிக்களுக்கும் ஊழியர்களுக்கும் வழங்கக்கூடிய ஊதியங்களை வெளியிட வேண்டும் என்று கம்பெனி சட்டம் 2013-ன் உட்பிரிவு 197(12) மற்றும் கம்பனிகள் (மேலாளர்கள் நியமனம் மற்றும் ஊதியம்) விதிமுறைகள் 2014-ன் விதி எண் 5(1) கட்டாயமாக்கியுள்ளது. கம்பனி சட்டம் 2013-ன் உட்பிரிவு 197 பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொருந்தாது.

தலைமை மேலாண்மை அதிகாரிகளின் ஊதியம் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் 50 விழுக்காடு நிரந்திர தொழிலாளர்கள் பெறும் ஊதியத்தை காட்டிலும் அதிகரித்துள்ளது. உயர் லாபமிட்டக்கூடிய 15 நிறுவனங்களின் நிலை இதுதான் என்று கம்பனிகள் வெளியிட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்த பொருளியளாளர்கள் ரித்திக கேரா மற்றும் மேக்னா யாதவ் தெரிவித்துள்ளனர்.

தரவுகள் கிடைக்கக்கூடிய 37 நிறுவனங்களில், 15 கம்பனிகளில் 50 விழுக்காடு நிரந்திர பணியாளர்களின் ஊதியம் குறைவான வேகத்தில் வளர்ந்துள்ளது. எஞ்சியுள்ள 21 நிறுவனங்களில் பணிப்புரியும் நிரந்திர பணியாளர்களின் ஊதியம் அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அதிகம் ஊதியம் பெறும் உயர் பதவிகளில் வகிக்கக்கூடியவர்களில் தலித் அல்லது பழங்குடியை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை. பெண்களை எடுத்துக்கொண்டால் விபா பாதல்கர் என்ற ஒரு பெண் மட்டுமே இடம்பெற்றுள்ளார், ஒரு இஸ்லாமியர் இடம்பெற்றுள்ளார் என்று ரித்திக கேரா மற்றும் மேக்னா யாதவ் குறிப்பிட்டுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்