Aran Sei

சுங்க கட்டணம் உயர்வு: மேம்படுமா சாலை வசதிகள்?

credit: blog.trucksuvidha.com

மிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சுங்க கட்டணங்களை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உயர்த்தப்பட்ட சுங்க கட்டணங்கள் அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சுங்க கட்டண உயர்வு ஜடி காரிடாருக்கு மட்டுமே பொருந்தும்.

அதன்படி, ஒருமுறை மட்டும் சுங்க சாலையில் பயணிக்கும் ஆட்டோ ரூ.10 செலுத்த வேண்டும். ஒருமுறை சென்று வர ரூ.19 செலுத்த வேண்டும். சுங்க சாலையில் ஒரே நாளில் மட்டும் பலமுறை பயணிக்க ரூ.33 ஆட்டோ ஓட்டுநர்களிடமிருந்து வசூலிக்கப்படும் என்றும் மாதம் முழுவதும் பலமுறை பயணிக்க ரூ.311 வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுங்க சாலையில் ஒருமுறை மட்டும் பயணிக்கும் கார்கள் ரூ.30 செலுத்த வேண்டும் என்றும் ஒரே நாளில் சென்று வர ரூ.60 செலுத்த வேண்டும் என்றும் மாதத்துக்கு பல முறை பயணிக்க ரூ.2390 செலுத்த வேண்டும் என்றும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளை பொறுத்தவரையில், ஒரு நாளில் ஒருமுறை மட்டும் பயணிக்க ரூ.78 வசூல் செய்யப்படும் என்றும் ஒரே நாளில் ஒருமுறை சென்று வர ரூ.154 வசூல் செய்யப்படும் என்றும் மாதம் முழுவதும் பலமுறை பயணிப்பதற்கு ரூ.3050 வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

லாரிகள் ஒருமுறை மட்டும் பயணிப்பதற்கு ரூ.117 வசூல் செய்யப்படும் என்றும் ஒரேநாளில் பலமுறை பயணிக்க ரூ.340 வசூல் செய்யப்படும் என்றும் மாதம் முழுவதும் பலமுறை பயணிப்பதற்கு ரூ.7500 வசூல் செய்யப்படும் என்றும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விலை உயர்வு குறித்து சுதந்திர வாகன வாடகை சங்கத்தின் மாநில செயலாளர் ஜூட் மேத்தியுடன் பேசிய போது, தமிழ்நாட்டில் உள்ளது போன்ற சுங்க கட்டணமுறை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்று கூறுகிறார். சுங்க கட்டணங்களை வசூல் செய்வதில் கவனத்துடன் இருக்கும் தனியார் ஒப்பந்ததாரர்கள் தேசிய நெடுஞ்சாலைகளை முறையாக பாராமரிக்காததுடன் வாகன ஓட்டுநர்களுக்கு எந்தவிதமான சாலை வசதிகளையும் ஏற்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டுகிறார்.

“கார் அல்லது வேறு எந்த வாகனம் வாங்கும்போதும் நாம் மாநில அரசுக்கு சாலை வரி செலுத்துகிறோம். அவ்வாறு இருக்க சாலைகளை பராமரிக்க ஏன் சுங்க வரி விதிக்க வேண்டும்” என்று அவர் ஜூட் கேள்வி எழுப்புகிறார்.

ஃபாஸ்டாக் மூலமாக சுங்க வரி வசூல் செய்யப்படும் பிரச்சினை குறித்து அவர்  பேசுகையில், “ஃபாஸ்டாக் என்பது ஒரு தனியார் நிறுவனம். அந்நிறுவனத்துக்கு சுங்க வரி வசூல் செய்வதற்கான உரிமையை யார் வழங்கினார்கள். ஒவ்வொரு ஓட்டுநரையும் ஃபாஸ்டாக் கணக்கில் குறைந்தபட்சம் ரூ.300 வைப்பு தொகையை பராமரிக்க சொல்வது நடைமுறையில் ஓட்டுநர்களால் இயலாத காரியம்” என்று அவர் கூறுகிறார்.

ஃபாஸ்டாக் செயலி ஓட்டுநர்களிடமிருந்து பணத்தை கூடுதலாக பிடித்தம் செய்கிறது என்றும் அதை மீண்டும் கோருவதற்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்றும் இது எத்தனை ஓட்டுநர்களுக்கு சாத்தியமாகும் என்று சுதந்திர வாகd வாடகை சங்கத்தின் மாநில செயலாளர் ஜூட் மேத்தியு கேள்வி எழுப்புகிறார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்