Aran Sei

பட்ஜட்டில் பொருளாதார மீட்சிக்கான அறிகுறி இல்லை – வைகோ

த்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2021-22 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் பொருளாதார மீட்சிக்கான வழி வகையை உருவாக்கி இருப்பதற்கான அறிகுறி இல்லை என்று மதிமுக பொதுச்செயலளார் வைகோ கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில் கொரோனா பெரும் துயரத்தால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு நாடே நிலைகுலைந்த சூழலில், கடந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு வீழ்ச்சி அடைந்துள்ளது என்று மத்திய அரசு கூறியதை சுட்டிக்காட்டிய அவர் பொருளாதார ஆய்வறிக்கையில் நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 11 சதவீதமாக இரட்டை இலக்கில் இருக்கும் என்று கூறப்பட்டு இருப்பதும் அதற்கான சாத்தியக்கூறுகள் மத்திய பட்ஜெட்டில் தென்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டைக் கூறுபோட்டு விற்கும் வெகுமக்கள் விரோத பட்ஜெட் – திருமாவளவன் கண்டனம்

நிதிப்பற்றாக்குறை 6.8 சதவீதமாக மதிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் 2020-21 இல் ரூபாய் 16 இலட்சம் கோடி வரி வருவாய் ஈட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 2020 நவம்பர் வரையில் ரூபாய் 7 இலட்சம் கோடி ரூபாய் மட்டுமே வரி வருவாய் கிடைத்துள்ளது. வருவாய் பற்றாக்குறையை எவ்வாறு ஈடுகட்டப் போகிறது மத்திய அரசு என்று வைகோ  கேள்வி எழுப்பியுள்ளார்.

“கொரோனா காலத்தில் கடந்த ஆண்டு தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 27 இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக பட்ஜெட்டில் கூறப்பட்டு உள்ளது. ஆனால் 2019-20 நிதியாண்டில் முந்தைய அரையாண்டில் சாதாரண சூழலில் செய்யப்பட்ட செலவைவிட 2020-2021 நிதியாண்டின் அரையாண்டில் கொரோனா சூழலில் செய்யப்பட்ட செலவு குறைவானது என்று சி.ஏ.ஜி. ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

’பொதுத்துறை நிறுவனங்களை திவாலாக்கி, அவற்றை தனியார்மயமாக்கும் மத்திய அரசு’ – பட்ஜட் குறித்து காங்கிரஸ் விமர்சனம்

வங்கிகளின் வாரா கடன் அதிகரிப்பு, ரிசர்வ் வங்கியின் வட்டி விகித அதிகரிப்பு போன்றவை பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இதனால் முதலீடுகள் குறைந்து விட்டன.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடுமையாகப் போராடி வரும் நிலையில் அவற்றை திரும்பப் பெறுவதற்கு முனையாமல், வேளாண் சட்டங்களை உறுதிப்படுத்தும் வகையில் பட்ஜெட் அறிவிப்புகள் உள்ளன” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

மியான்மர் இராணுவப் புரட்சி – ஆட்சிகள் மாறியும் காட்சிகள் மாறவில்லை

“வங்கிகள் தனியார் மயம், காப்பீட்டுத் துறைப் பங்குகள் விற்பனை போன்றவை தொடருகின்றன. தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவோம் என்ற அறிவிப்பின் மூலம் பா.ஜ.க. அரசின் எதேச்சாதிகாரம் மாநிலங்களின் மீது திணிக்கப்படுவது பட்ஜெட்டில் வெளிப்படையாகத் தெரிகிறது என்று கூறிய அவர், தமிழக மக்களின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் சேலம்-சென்னை 8 வழி பசுமைச் சாலையை நடப்பு நிதி ஆண்டில் தொடருவோம் என்று நிதி அமைச்சர் அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்