Aran Sei

ஜப்பானில் பெண்களின் தற்கொலை அதிகரிப்பு – உலக பொருளாதார நெருக்கடியே காரணம்?

ப்பான் நாட்டில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக அதிகரிதுள்ளது தெரியவந்துள்ளது.

2020 ஆம் ஆண்டில் 20,919 பேர், தற்கொலை மூலம் தங்கள் உயிரை மாய்ததாக, அந்நாட்டின் தேசிய காவல்துறை வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.  2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2020 ஆம் ஆண்டு, 750 பேர் கூடுதலாக தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. சரியாக 3.7% சதவிகிதம், இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது

உலகாளாவிய நிதி நெருக்கடிதான், தற்கொலை விகிதம் அதிகரித்தமைக்கு காரணமாக கருதப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு, 13,943 ஆண்கள் தற்கொலைக்கு பலியாகிருப்பதாக இத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை, இதற்கு முந்தைய ஆண்டு (2019) தற்கொலை செய்துகொண்ட ஆண்களைவிட, எண்ணிகையில் 135 நபர்கள் குறைவுதான்.

பெண்களை பொறுத்தவரை, 2020 ஆம் ஆண்டு, கூடுதலாக 885 பெண்கள் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி, பெண்களில் 2020 ஆம் ஆண்டில் மட்டும், 6976 பேர் தற்கொலையால் உயிரிழந்துள்ளனர். கடந்த ஐந்து வருடத்தை ஒப்பிடுகையில் இதுவே அதிகபடியான எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது.

ஆண்கள் – பெண்கள் மட்டுமன்றி, கடந்த ஆண்டு ஜப்பானில், குழந்தைகளின் தற்கொலைகளும் அதிகரிதுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. தரவுகளின் படி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், நவம்பர் வரை, தொடக்ககல்வி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 440 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதாக காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த எண்ணிக்கை, இதுவரை பதிவான குழந்தைகள் தற்கொலை எண்ணிக்கை பதிவில் மிகமிக உயர்ந்தது.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தால், தற்கொலைகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்கலாம் என்று ஜப்பானிய அரசு கூறியுள்ளது. மேலும் விவரங்களை ஆராய்ந்து, சரியான காரணத்தை அறிந்து சூழலை சரிசெய்ய முயல்வதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

குறிப்பாக தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், அங்கு பணியாற்றுபவர்களை விசாரித்து, மக்கள் மத்தியில் கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Source: NHK World

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்