Aran Sei

எகிப்தின் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது – ஆசிய ஐரோப்பிய கப்பல் போக்குவரத்து நெருக்கடி எப்போது தீரும்?

image credit : cnn.com

கிப்து நாட்டின் சூயல் கால்வாயை முடக்கியிருந்த எவர்கிவன் சரக்குப் பெட்டக கப்பல், ஒரு வாரத்துக்குப் பிறகு, திங்கள் மாலை விடுவிக்கப்பட்டது என்று தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.

13 இழுவைப் படகுகளின் உதவியோடு, 30,000 கன மீட்டர் மணலை தோண்டி எடுத்து, நேற்று முழுநிலவு நாளில் அலைகள் உயர்மட்டத்தை அடைந்ததை பயன்படுத்தி மீட்புக் குழுக்கள் கப்பலை மீட்டுள்ளன. நான்கு கால்பந்தாட்ட மைதானங்களின் நீளமுடைய எவர்கிவன் கப்பலை விடுவித்ததைத் தொடர்ந்து இழுவைப் படகு ஊழியர்கள் ஹாரன்களை ஒலிக்க விட்டு கொண்டாடியதாக தி கார்டியன் தெரிவிக்கிறது.

image credit : cnn.com
நேற்று, இழுவை படகுகள் சூழ சூயஸ் கால்வாயில் நகரும் எவர் கிவன் – image credit : cnn.com

எவர்கிவன் கப்பல் நகர்வதைக் காட்டும் வீடியோவை புளூம்பெர்க் வெளியிட்டுள்ளது.

சூயல் கால்வாய் ஆணையத்தின் தலைவரான அட்மிரல் ஒசாமா ராபி, சூயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கி விட்டதாக அறிவித்தார் என்று சூயல் கால்வாய் ஆணையம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

image credit : cnn.com
வியாழக்கிழமை – சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் ஒசாமா ராபல் – image credit : cnn.com

கால்வாய் நாளின் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்றும், காத்திருக்கும் கப்பல்கள் அனைத்தும் கடந்து செல்வதற்கு ஒரு வாரம் வரை ஆகலாம் என்றும் சூயஸ் கால்வாய் ஆணையம் கூறியுள்ளது.

“சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்ட கப்பலால் ஏற்பட்ட நெருக்கடியை எகிப்தியர்கள் இன்று ஒரு முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்” என்று எகிப்து அதிபர் அப்தல் ஃபதா அல்-சிசி ட்வீட் செய்துள்ளார்.

image credit : cnn.com
வியாழக்கிழமை – எவர்கிவன் கப்பலை விடுவிக்க முயற்சிக்கும் இழுவைப் படகுகள் – image credit : cnn.com

உலகத்தின் மிக சுறுசுறுப்பான கடல்வழி போக்குவரத்து பாதையான சூயஸ் கால்வாய் அடைக்கப்பட்டதால் பல நூறு கோடி டாலர் மதிப்பிலான சரக்குகள் தேங்கிப் போயின. உலக வர்த்தகத்தில் ஒரு நாளைக்கு $600 கோடி முதல் $1000 கோடி வரை இழப்பு ஏற்பட்டது என்றும், தொழில்களுக்குத் தேவையான சரக்குகளை பெறுவது கடுமையாக பாதிக்கப்பட்டது என்றும் தி கார்டியன் மதிப்பிடுகிறது.

சூயஸ் கால்வாயில் சிக்கி, போக்குவரத்தை முடக்கிய கப்பல் – ஊழியர்கள் அனைவரும் இந்தியர்கள்

ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் இந்த குறுகலான நீர்வழிப் பாதை 19-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது.

image credit : cnn.com
ஞாயிற்றுக் கிழமை – கப்பல் சிக்கியிருப்பதைக் காட்டும் செயற்கைக்கோள் புகைப்படம் – image credit : cnn.com

இந்தக் கால்வாயை இயக்கும் ஆங்கிலேய-ஃபிரெஞ்சு நிறுவனத்தை 1956-ம் ஆண்டில் எகிப்து நாட்டுடமை ஆக்கியது. அது அரசியல் இராணுவ நெருக்கடியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, கடந்த 65 ஆண்டுகளாக சூயஸ் கால்வாய் ஆணையத்தின் மூலம் சூயஸ் கால்வாயை எகிப்து நிர்வகித்து வருகிறது.

image credit : cnn.com
வியாழக்கிழமை, எகிப்தின் கிரேட் பிட்டர் ஏரியில் காத்திருக்கும் கப்பல்கள் – image credit : cnn.com

சூயஸ் கால்வாய் ஒரு வாரம் முடங்கியதால், எகிப்து அரசுக்கு $9 கோடி கட்டண இழப்பு ஏற்பட்டுள்ளது. திங்கள் கிழமை மாலை நிலவரத்தின்படி 442 கப்பல்கள் கால்வாயை கடப்பதற்கு காத்திருக்கின்றன.

வேறு பல கப்பல்கள், தென் ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனை வழியாக சுற்றி விடப்பட்டுளன. ஆனால், 9,000 கி.மீ அதிக தூரம் கொண்ட அந்தப் பாதையில், ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையேயான பயணம் 10 நாட்கள் அதிக காலம் பிடிப்பதோடு, போக்குவரத்துக் கட்டணம் கடுமையாக அதிகரிக்கிறது என்று தி கார்டியன் தெரிவிக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்