Aran Sei

பங்குச் சந்தை இழப்புகள்: உண்மையா? கற்பனையா?

credit: Indian express

ரோப்பாவில் கொரோனா தொற்று பரவுவதல் அதிகரித்திருப்பதால் மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்படும் என்ற அச்சத்தில் உலக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதன் காரணமாக திங்கள் அன்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 812 புள்ளிகள் சரிந்துள்ளது.

ஸ்பெய்ன், கிரீஸ், டென்மார்க் போன்ற ஐரோப்பிய நாடுகள் கொரோனா பரவலை சமாளிக்க புதிதாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இங்கிலாந்தும் கூட இரண்டாவது முறையாக பொது முடக்கத்தை அமல் செய்ய பரிசிலனைச் செய்து கொண்டிருக்கின்ற நிலையில் ஐரோப்பிய முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை விற்று வருகின்றனர்.

இதன் எதிரொலிப்பாக இந்தியச் சந்தையிலும் பங்கு குறியீடுகள் வீழ்ந்துள்ளன. சென்செக்ஸ் 812 புள்ளிகளும் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 2.21 விழுக்காடும் வீழ்ந்துள்ளன.

சென்செக்ஸ் குறியீட்டுக்குள் இண்டஸ் இந்த் வங்கியின் பங்குகள் அதிகபட்சமாக 8.67 விழுக்காடு வீழ்ந்துள்ளன. அதைத் தொடர்ந்து பாரதி ஏர்டல், டாடா ஸ்டீல், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, எம்&எம், மாருதி மற்றும் ஆக்ஸிஸ் வங்கி போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்தது.

உலகளவில் நிலவக்கூடிய அசாதரண சூழல் காரணமாக முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை விற்று வரும் நிலையில், நேற்று மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குச் சந்தை ரூ.154.76 லட்சம் கோடியாக இருந்தது. பங்குச் சந்தை வீழ்ச்சியில் முதலீட்டாளர்கள் ரூ 4.23 லட்சம் கோடி இழந்துள்ளனர் என்று தி இந்து நாளேடு குறிப்பிடுகிறது.

முதலீட்டாளர்கள் ரூ 4.23 லட்சம் கோடி இழந்துள்ளனர் என்ற செய்தியை எப்படி புரிந்து கொள்வது என்று அரண் செய், பங்கு சந்தை ஆலோசகர் சோம வள்ளியப்பனுடன் பேசிய போது, “இது ஒரு பெயரளவிலான இழப்பு (notional loss)” என்று கூறினார்.

பெயரளவிலான இழப்பு பற்றி விளக்கமாக பேசுகையில், “நீங்கள் ரூ 40,000 மதிப்புள்ள வீட்டை வாங்கியுள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். சென்ற மாதம் அந்த வீட்டின் மதிப்பு ரூ.6 லட்சம் வரையில் போகிறது என்று நீங்கள் கேள்விப்படுகிறீர்கள். இன்று அந்த வீட்டின் மதிப்பு ரூ 5 லட்சம் போகின்றது என்று வைத்துக்கொள்வோம் நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் இழந்துள்ளீர்கள் என்று இதற்கு அர்த்தம்”.

”உண்மையில், நீங்கள் எதுவும் இழக்கவில்லை. யார் பங்குகளை விற்றார்களோ அவர்களுக்கு தான் இழப்பு” என்று விளக்கினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்