பெட்ரோலிய பொருட்கள் விலை உயரும்போது மாநில அரசுகளே அதிக வருவாய் ஈட்டுகின்றன என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், எரிபொருள் விலை அதிகரிப்பால் மக்களுக்கு ஏற்படும் கவலைகுறித்து மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.
விலை அதிகரித்து வருவது குறித்தி பேசிய அவர், “இதுகுறித்து நான் நிறைய கருத்துக்களை தெரிவித்துள்ளேன். பெட்ரோலிய அமைச்சகமும் இதுகுறித்து பேசியுள்ளது. வரிகளை பொறுத்த வரை ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் வரி விதிக்கின்றன. ஒன்றிய அரசின் வரி நிலையானது மாறாது, ஆனால் மாநில அரசின் வரி மதிப்பு கூட்டும் அடிப்படையிலானது. எனவே எரிபொருள் விலை அதிகரிக்கும்போது எல்லாம் மாநில அரசுகளுக்கு வருவாய் அதிகரிக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.