Aran Sei

இந்தியப் பொருளாதாரம்: நிச்சயமற்ற நிலையில் மாநிலங்கள்

credit: thehindubusinessline

கொரோனாவால் மாநிலங்களின் நிதி நிலையில் கடும் பாதிப்பு

நடப்பு ஆண்டில் மாநில அரசுகள் 1 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு செலவீனத்தை குறைக்க உள்ளன என்று ஐ.சி.ஆர்.ஏ என்ற தனியார் முதலீட்டு நிறுவனம் கூறியுள்ளது.

மாநிலங்களின் நிதி பற்றாக்குறை 2020-21-ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.25 முதல் 5.52 விழுக்காடு வரையில் அதிகரிக்கும் என்று  ஐ.சி.ஆர்.ஏ குறிப்பிட்டுள்ளது.

மத்திய நிதித் தொகுப்பிலிருந்து மாநிலங்களுக்கு பிரித்து வழங்க வேண்டிய நிதி, ஜி.எஸ்.டி இழப்பீடு தொகை ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தோம் என்றால், இந்த நிதி ஆண்டில் மாநிலங்களின் மூலதன செலவீனம் ஒரு இலட்சம் கோடி ரூபாய் வீழ்ச்சியடைந்து ரூ 3.4 இலட்சம் கோடியாக இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாநில அரசுகளுக்கு ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகையாக மொத்தமாக 3 இலட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டி உள்ளது. இதில் ஜி.எஸ்.டி கூடுதல் வரி மூலமாக ரூ 65,000 கோடி  வருமானம் ஈட்டபட்டுள்ளது. இது போக எஞ்சியிருக்கும் ரூ 2.35 இலட்சம் கோடி  ஜி.எஸ்.டி உண்டாக்கிய வருமான பற்றாக்குறை ஆகும்.

இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ 7.8 இலட்சம் கோடி மாநிலங்களின் பங்காக  வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ரூ 5 இலட்சம் கோடிதான் மத்திய நிதி தொகுப்பிலிருந்து பிரித்து வழங்கப்படும். ஐ.சி.ஆர்.ஏ மதிப்பீடு செய்துள்ளது.

இந்த பற்றாகுறைக்கு கொரோனா தொற்று நுகர்வு மற்றும் அரசின் வரி வருமானத்தின் மீது ஏற்படுத்தியத் தாக்கம் பகுதியளவு காரணம் என்று அந்நிறுவனம் குறிப்பிடுகிறது.

இந்த போன்ற காலத்தில் தான் மாநிலங்கள் தங்களது செலவீனங்களை திட்டமிடுவதற்கு நிதி தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்று தேசிய பொதுநிதியியல் மற்றும் கொள்கை நிறுவனத்தின் பேராசிரியர் லேகா சக்கரபோர்த்தி மிண்ட் நாளேட்டுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த நாட்டு பொருளாதாரம் சந்திக்கும் நிச்சயமற்றதன்மையை தற்போது மத்திய அரசு மட்டுமல்ல மாநில அரசுகளும் சந்திக்கின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் பொருளாதாரம் மீட்சியடைவதற்கு அரசு தற்போது செய்யும் முதலீடு பன்மடங்கு அதிகரிக்க வேண்டும் என்றும் ஏற்கெனவே, மாநிலங்கள் அதிகபடியாக கடன் வாங்கியுள்ள நிலையில், உள்கட்டமைப்பு வசதி போன்ற மூலதன செலவினங்களின் மீது மாநில அரசுகளின் முதலீடு அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக லேகா சக்கரபோர்த்தி கருத்து கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்