Aran Sei

இறக்குமதியான ஸ்மார்ட்போன்கிளல் 76% சீன தயாரிப்பு – ஆய்வு நிறுவனம் தகவல்

Image Credits: Android PIT

கொரோனா பொதுமுடக்கத்துக்குப் பின், செப்டம்பர் மாத காலாண்டில் இந்தியாவின் ஸ்மார்ட்போன் இறக்குமதி 5 கோடியைத் தொட்டுள்ளதாகக் கேனலிஸ் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில், சீன நிறுவனங்கள் மொத்தமாக 76% சந்தைப் பங்கை பெற்றுள்ளன.

“2020-ன் 3-ம் காலாண்டில், இந்திய  ஸ்மார்ட்போன் இறக்குமதி மீண்டும் 5 கோடி என்ற எண்ணிக்கையுடன் (முந்தைய ஆண்டின் 4.62 கோடி இறக்குமதியிலிருந்து) 8% வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்தியாவில் ஒரே காலாண்டில் இவ்வளவு  ஸ்மார்ட்போன்கள் இறக்குமதியாவது இதுவே முதல் முறை,” என்று கேனலிஸ் கூறியுள்ளது.

ஜியோமி 1.31 கோடி செல்போன்களை இறக்குமதி செய்து 26.1 சதவீத பங்களிப்புடன் முதல் இடத்தில்  உள்ளது. 1.02 கோடி ஸ்மார்ட்போன்களை இறக்குமதி செய்து விவோவை வீழ்த்திச் சாம்சங் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

விவோ 88 லட்சம் (17.6% ) போன்களையும், ரியல்மீ 87 லட்சம் போன்களையும் (7.4% ) மற்றும் ஒப்போ 61 லட்சம போன்களையும் (12.1% ) இறக்குமதி செய்துள்ளன.

3-ம் காலாண்டில், ஆப்பிள் 8 லட்ச செல்போன்களை இறக்குமதி செய்து இரட்டை இலக்க வளர்ச்சியுடன் மீண்டும் வேகமடைந்துள்ளது.

ஸ்மார்ட்போன் விற்பனையாளர்கள் இந்தியச் சந்தையில் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்று கனலிஸ் ஆய்வாளர் அத்வைட் மார்டிகர் தெரிவித்ததாக ‘பைனான்சியல் எக்ஸ்பிரஸ்‘ செய்தி வெளியிட்டுள்ளது.

“மூன்று மாத பொதுமுடக்கத்துக்குப் பிறகு கட்டுப்பாடுகளை மெதுவாகவும் நிச்சயமாகவும் அரசு தளர்த்தியுள்ளது நிலையான வளர்ச்சிக்குச் சரியான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. ஏறக்குறைய அனைத்து விற்பனையாளர்களும் நேர்மறையான ஏற்றுமதி வளர்ச்சியைக் காட்டியுள்ள நிலையில், பண்டிகை காலத்திற்கு முன்னதாகவே இணையதளம் மூலம் சாதனங்களைப் பெற ஊக்கப்படுத்தியவர்கள்தான் உண்மையான வெற்றியாளர்கள்,” என்று அத்வைட் கூறியுள்ளார்.

அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட்டில் நடந்துகொண்டிருக்கும் விற்பனை, பொருளாதார மந்தநிலை இருக்கும்போதிலும், ஒரு நல்ல ஸ்மார்ட்போனை சரியான விலையில் வாங்குவதற்கான இந்தியாவின் ஆர்வம் தெளிவாக வெளிப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வேலையின்மை உயர்வு, சமூகத்தில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களைப் பாதித்துள்ளது. இது இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையை நீண்டகாலத்தில் பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.

“இந்தியாவின் ஒரு பகுதி சமூக ரீதியான துண்டிப்பில் இருக்கும் நிலையில், ஸ்மார்ட்போன் சமூக இணைப்புக்கு மட்டுமல்லாமல், பொழுதுபோக்கு, கல்வி, வங்கி பரிவர்த்தனை, கட்டணம் செலுத்துவது மற்றும் பலவற்றிற்கும் அவசியமாகிவிட்டது,” என்று அத்வைட் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சறுத்தலாக இருப்பதாகக் கூறி சீனாவைச் சேர்ந்த 59 செயலிகளுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தடை விதித்தது. இந்தத் தடையில் புகழ்பெற்ற டிக்டாக், யுசி பிரவுசர், ஷேர் இட், கேம் ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு செயலிகள் இடம் பெற்றிருந்தன. தற்போது, ஸ்மார்ட்போன் இறக்குமதியில் சீன நிறுவனங்கள் மொத்தமாக 76% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்