Aran Sei

பழைய கார்களை புதுப்பிக்க கட்டணம் 8 மடங்கு உயர்வு – மத்திய அரசின் புதிய வாகனக் கொள்கை

image credit : deccanherald.com

க்டோபர் மாதம் முதல் வாகன பதிவுச் சான்றிதழ்களை புதுப்பிப்பதற்கான கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை பழைய வாகனங்களை கழித்துக் கட்டுவதற்கான, மத்திய அரசின் புதிய வாகனக் கொள்கையின் ஒரு பகுதி என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மத்திய மோட்டார் வாகனங்கள் (திருத்த) விதிகள் 2021-ஐ வெளியிட்டுள்ளது.

15 ஆண்டுகளுக்கும் மேல் வயதான காருக்கான புதுப்பித்தல் கட்டணம் ரூ 5,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது இப்போதைய கட்டணமான ரூ 600-ஐ விட 8 மடங்கை விட அதிகமாகும்.

அதே போல பழைய இருசக்கர வண்டியை புதுப்பிப்பதற்கான கட்டணம் இப்போதைய ரூ 300-லிருந்து ரூ 1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு பேருந்து அல்லது லாரியின் தகுதிச் சான்றிதழை புதுப்பிப்பதற்கான கட்டணம் (ரூ 500), 21 மடங்கு உயர்த்தப்பட்டு ரூ 12,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனியார் வாகனங்களை புதுப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டால் மாதத்துக்கு ரூ 300 முதல் ரூ 500 வரை அபராதம் விதிக்கப்படும். வணிக வாகனங்களை புதுப்பிப்பதற்கு தாமதம் ஏற்பட்டால் ரூ 50 தினசரி அபராதம் விதிக்கப்படும் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவிக்கிறது.

இந்த புதிய விதிகளின்படி, ஒரு வாகன உரிமையாளர் தனது 15 ஆண்டு பழைய வண்டியை கழித்துக் கட்டுவதற்கான சான்றிதழை பெற்றால், புதிய வாகனம் வாங்குவதற்கான பதிவுச் சான்றிதழுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்று டெக்கான் ஹெரால்ட் செய்தி தெரிவிக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்