Aran Sei

மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் ரகசிய நடவடிக்கைகள் – உச்ச நீதிமன்றம் கேள்வி

விஜய் மல்லையாவை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற அவரது வழக்கறிஞரின் கோரிக்கை மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.

இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல், வெளிநாட்டிற்கு தப்பியோடியதாக குற்றம் சாட்டப்பட்டவர்  தொழிலதிபர் விஜய் மல்லையா. அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு, அவரின் வழக்கறிஞர்  ஈ.சி.அகர்வாலா  உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

நேற்று (நவம்பர் 2), அந்த மனுவை விசாரித்த நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான சிறப்பு அமர்வு, அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளது. மேலும் அவரை  இங்கிலாந்திலிருந்து இந்தியா கூட்டிவர செய்யப்பட்டுள்ள ரகசிய ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு ஆறு வார கால அவகாசம் அளித்ததுள்ளதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்பு, மல்லையாவின் தரப்பு, அவர் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக கொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

Bad Boy Billionaires – ஹீரோக்களின் பின்னணி : ஷியாம் சுந்தர்

கடந்த அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி , சில ரகசிய சட்ட நடவடிக்கைகள் நடந்துக்கொண்டிருப்பதால், விஜய் மல்லையாவை நாடு கடத்துவது இப்போது சாத்தியம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்ததாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த ரகசிய நடவடிக்கைகளின் தன்மை குறித்து, நவம்பர் 2-ஆம் தேதிக்குள் தெளிவுபடுத்துமாறு உச்ச  நீதிமன்றம், மல்லையாவின் தரப்புக்கு உத்தரவிட்டிருந்ததாக ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ குறிப்பிட்டுள்ளது.

இந்த ரகசிய நடவடிக்கை  எப்போது முடிவடையும், எப்போது அவர் நீதிமன்றத்திற்கு முன் வந்து, தனக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை ஏற்றுக்கொள்வார் என்று மல்லையா தரப்பிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதாகவும், இதை தொடர்ந்து, நீதிமன்றம் வழக்கு விசாரனையை அடுத்த ஜனவரிக்கு ஒத்திவைத்துள்ளதாகவும் ‘தி இந்து’ தெரிவித்துள்ளது.

வாராக் கடன் பிரச்சனை: தீர்க்குமா திவால் சட்டத்திருத்தம்?

2017-ம் ஆண்டு மே 9 ஆம் தேதி, மல்லையாவை குற்றவாளி என்றும், அவர் வாங்கிய 600 கோடி ரூபாய் கடனை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி, இந்தத் தீர்ப்புக்கு எதிராக  மல்லையா தாக்கல் செய்த  மறுஆய்வு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்