Aran Sei

ஆன்லைன் வர்த்தகத்தில் ரிலையன்ஸின் ஆதிக்கம் – பின்னுக்குத் தள்ளப்படும் அமேசான், பிளிப்க்கார்ட்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) ஆன்லைன் பர்னிட்சர் விற்பனை நிறுவனமான அர்பன் லேடர் ஹோம் டெகோர் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்‘ நிறுவனத்தை ரூபாய் 182.12 கோடிக்கு வாங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் இணைய வழி சந்தையில் தனது இருப்பை விரிவுபடுத்தியுள்ளது.

முகேஷ் அம்பானியின் ஆர்ஐஎல் நிறுவனத்தின் சில்லறை விற்பனை பிரிவான ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் (ஆர்ஆர்விஎல்), அர்பன் லேடர் நிறுவனத்தின் 96 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. மேலும், மீதமுள்ள 4 சதவீத பங்குகளை வாங்கும் எண்ணத்தில் அன்னிறுவனம் உள்ளதாக ‘லைவ் மிண்ட்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

யப்ப்பா.. அம்பானி வருமானம் இவ்வளவா?

மேலும், ஆர்ஆர்விஎல் ரூபாய் 75 கோடி வரை முதலீடு செய்ய முன் வந்திருக்கிறது. அர்பன் லேடர் நிறுவனத்தின் 100 சதவீத உரிமையை எடுக்க உள்ளதாகவும், இந்தத் திட்டம் டிசம்பர் 2023-க்குள் நிறைவடையும் என்றும் ‘லைவ் மிண்ட்’ குறிப்பிட்டுள்ளது.

ஆன்லைன் மருந்து நிறுவனமான நெட்மெட்ஸின் பெரும்பான்மையான பங்குகளை, 620 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் வாங்கிய மூன்று மாதங்களுக்குப் பிறகு அர்பன் லேடர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிக் பஜார் – ரிலையன்ஸ்க்கு முட்டுக்கட்டை போடும் அமேசான்

“இதன் மூலம் ரிலையன்ஸ், இணைய சந்தைகளான பிளிப்கார்ட், அமேசான் போன்றவற்றின் சந்தை பங்கில் பெரிய ஆதிக்கம் செலுத்தும்.” என்று சந்தை நிபுணர் ஒருவர் கூறியதாக ‘லைவ் மிண்ட்’ தெரிவித்துள்ளது.

ரெட்ஸீர் கன்சல்டிங்சின் தரவுகளின் படி,  இந்தியாவில் ஆன்லைன் பர்னிட்சர் சந்தை ஆண்டுக்குச் சராசரியாக 80-85 சதவீத வளர்ச்சியடைந்துள்ளது, இந்த நிதியாண்டில் 700 மில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. ஆனால் ஒட்டுமொத்த பர்னிட்சர் சந்தையில், இந்த ஆன்லைன் வர்த்தகம் 3 சதவீதத்திற்கும் குறைவான பங்குகளையே கொண்டுள்ளது. அதாவது, ஆன்லைன் பர்னிட்சர் சந்தை வருமானம் 17 பில்லியன் டாலராக உள்ளது.

`ஜியோவைப் புறக்கணியுங்கள்’-பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்

தொடங்கப்பட்டு எட்டு ஆண்டுகளாக அர்பன் லேடர் நிறுவனம், வீட்டு பொருட்கள் மற்றும் அலங்கார தயாரிப்புகளுக்கான இணைய விற்பனையை வழங்கி வருகிறது. மேலும் இந்த நிறுவனம் பல நகரங்களில் சில்லறை விற்பனை செய்கின்ற கடைகளையும் நடத்தி வருகிறது. இன்னிறுவனம் 2018 ஆம் ஆண்டில் சுமார் 1,200 கோடியாக மதிப்பிடப்பட்டது. ஆனால் இது 2019 ஆம் ஆண்டில் சுமார் ரூபாய் 750 கோடியாக வீழ்ச்சி அடைந்தது..

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்