மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராகப் பஞ்சாப் சட்டப் பேரவை மசோதாக்களை நிறைவேற்றிய பிறகு ராஜஸ்தான் விவசாயச் சட்டங்களை நிராகரிக்கும் இரண்டாவது மாநிலமாகிறது.
இது தொடர்பான முந்தைய அரண்செய் செய்தி :
பஞ்சாப் விவசாய மசோதாக்கள் நிறைவேறின – புறக்கணித்த பாஜகவுக்கு ப.சிதம்பரம் கண்டனம்
இது தொடர்பாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலோட் ட்வீட் செய்திருக்கிறார்.
“சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் நமது அன்னதாதாக்களுடன் (விவசாயிகளுடன்) உறுதியாக நிற்கிறது. காங்கிரஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நிறைவேற்றியுள்ள விவசாயிகள் விரோதச் சட்டங்களைத் தொடர்ந்து எதிர்த்து வரும். இன்று [அக்டோபர் 20] பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் அரசாங்கம் இந்தச் சட்டங்களுக்கு எதிராக மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. ராஜஸ்தானும் விரைவில் இத்தகைய மசோதாக்களை நிறைவேற்றும்” என்று அவர் கூறியிருந்தார்.
INC under the leadership of Smt #SoniaGandhi ji & #RahulGandhi ji stands resolutely with our annadatas (अन्नदाता) and will continue to oppose the anti-farmer laws passed by NDA Govt. Today Congress Govt in #Punjab has passed Bills against these laws & #Rajasthan will follow soon.
— Ashok Gehlot (@ashokgehlot51) October 20, 2020
அவர் வெளியிட்ட இன்னொரு ட்வீட்டில், “விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்காக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவது என்று விவசாயிகளின் நலன்களுக்காக அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
मंत्री परिषद ने प्रदेश के किसानों के हित में निर्णय किया कि उनके हितों को संरक्षित करने के लिए शीघ्र ही विधानसभा का विशेष सत्र बुलाया जाए। सत्र में भारत सरकार द्वारा लागू किए गए कानूनों के प्रभाव पर विचार-विमर्श किया जाकर राज्य के किसानों के हित में वांछित संशोधन विधेयक लाए जाएं।
— Ashok Gehlot (@ashokgehlot51) October 20, 2020
அமைச்சரவை குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாய விளைபொருட்களை வாங்குவதைக் கட்டாயமாக்குவதை வலியுறுத்தியிருக்கிறது. “மத்திய அரசின் புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட பிறகு, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் விவசாய விளைபொருட்களைப் பதுக்கி வைப்பதற்கான உச்சவரம்பைக் குறைப்பது, கறுப்புச் சந்தை, பதுக்கல், விலை உயர்வு ஆகியவற்றுக்கு இட்டுச் செல்லும்” என்று அமைச்சரவை கருத்து சொல்லியிருப்பதாக தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
விவசாய விளைபொருட்கள் கொள்முதல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் சிவில் நீதிமன்றங்களின் அதிகாரத்தை மீண்டும் மீட்பது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.
ராஜஸ்தான் மாநில அரசு சென்ற மாதம், விவசாய விளைபொருட்கள் சந்தைப்படுத்தல் கமிட்டி சட்டம் 1961-ஐ மாநிலம் முழுவதற்கும் விரிவாக்கும் அரசாணையை வெளியிட்டது. இதன் மூலம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக விளைபொருட்களை வாங்கும் தனியார் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு வழி ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனிய காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மத்திய விவசாயச் சட்டங்களை ரத்து செய்யும் வகையில் சட்டங்களை இயற்றும்படி கேட்டுக் கொண்டிருந்தார் என்று நேஷனல் ஹெரால்ட் செய்தித் தாள் தெரிவிக்கிறது.
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கொலோட், இன்னொரு ட்வீட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தப் போகிறோம் என்று சொன்ன பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்..
“சிஏஏ அமல்படுத்துவது தொடர்பாக பாஜக தலைவர் ஜேபி நட்டாவின் அறிக்கை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. கொரோனா நோய்த்தொற்று ஆரம்பிப்பதற்கு முன்பே நாட்டில் மதரீதியான பதற்றம் நிலவி வந்தது. சிஏஏ-வை அமல்படுத்தியே தீருவோம் என்று பாஜக வலியுறுத்தியதன் விளைவாக பல இடங்களில் நிலைமை மிகவும் பதற்றமாக இருந்தது” என்றும் அவர் கூறியிருக்கிறார்.
BJP President JP Nadda ji’s statement regarding implementation of #CAA is most unfortunate. Even before Covid-19 pandemic started, there were communal tensions in the country & the situation was very tense in a number of areas due to BJP’s insistence on implementing CAA.
1/— Ashok Gehlot (@ashokgehlot51) October 21, 2020
“இப்போது கொரோனா நிலைமை இன்னும் மோசமாக இருக்கும் நிலையில், அவர்கள் மீண்டும் பதற்றங்களை உருவாக்க நினைக்கிறார்கள். நாடு எதிர்கொள்ளும் நெருக்கடியிலிருந்து ஒற்றுமையாக மீண்டு வருவதற்கான நேரம், இது. அமைதியையும் மத நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் நேரம் இல்லை”
என்றும் அசோக் கொலோட் ட்வீட் செய்திருக்கிறார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.