உலகில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு பொருளாதாரத்தை எவ்வாறு அழிப்பது என்பதற்கு மோடி நிர்வாகம் ஒரு சாட்சி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
கொரோன தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட ஊரடங்கிற்கு பின்னர், இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் சொத்துமதிப்பு 35 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஆக்ஃபாம் இந்தியா நிறுவனம் அன்மையில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அம்பானி, ஒரு மணிநேரத்தில் சம்பாதித்ததை, தொழிலாளி சம்பாதிக்க 10,000 ஆண்டுகளாகும் – ஆக்ஸ்ஃபாம்
அதில், “ஊரடங்கு காலகட்டத்தில் இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு ரூ.12.97 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இந்தச் சொத்துகளை 13.80 கோடி ஏழைகளுக்குத் தலா ரூ.94 ஆயிரம் வழங்க முடியும். இந்திய பணக்காரர்களில் முதல் 11 இடங்களில் இருப்பவர்களின் சொத்து, கொரோனா காலத்தில் அதிகரித்துள்ளது. அவர்களுக்குக் குறைந்தபட்சமாக ஒரு சதவீதம் வரி விதித்தாலே மத்திய அரசின் ஜன் அவுஷதி திட்டத்துக்கு 140 மடங்கு நிதி ஒதுக்க முடியும்.” என்று குறிப்பிடப்படுள்ளது.
மேலும், “கடந்தாண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து ஒரு மணி நேரத்துக்கு 1.70 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். புள்ளிவிவரங்கள்படி, அம்பானி கொரோனா ஊரடங்கு காலத்தில் ஈட்டிய தொகை, அமைப்புசாரா துறையில் உள்ள 40 கோடி பணியாளர்களை வறுமையில் தள்ளும் அச்சத்தை ஏற்படுத்திவிட்டது.” என்று ஆக்ஃபாம் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த ஊரடங்கு காலத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஒரு மணி நேரத்தில் பெற்ற வருமானத்தைப் பெற, ஒருதொழிலாளருக்கு 10,000 ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்றும், முகேஷ் அம்பானி ஒரு வினாடியில் பெற்ற வருமானத்தை ஒரு தொழிலாளி பெற 3 ஆண்டுகள் ஆகும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆக்ஸ்ஃபாம்மின் இந்த அறிக்கையைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “3 அல்லது 4 கோடீஸ்வரர்களின் தனிப்பட்ட நலனுக்காக மட்டுமே பிரதமர் நாட்டை நிர்வாகம் செய்தால் இதுதான் நடக்கும்.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
This is what happens when the PM runs a country in the sole interest of 3-4 crony capitalists. pic.twitter.com/w1la4Rw2NK
— Rahul Gandhi (@RahulGandhi) January 27, 2021
மற்றொரு ட்வீட்டில், “உலகின் வேகமாக வளர்ந்து வரும் ஒரு பொருளாதாரத்தை எவ்வாறு அழிப்பது என்பதற்கு மோடி அரசின் நிர்வாகம் ஒருபாடம்.” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.