விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் இருக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இன்று (பிப்ரவரி 1), பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடர்ந்து 9 ஆவது பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021-22 நிதியாண்டுக்கான இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.
இதுகுறித்து, இன்று (பிப்ரவரி 1) காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
#Budget2021 must:
-Support MSMEs, farmers and workers to generate employment.
-Increase Healthcare expenditure to save lives.
-Increase Defence expenditure to safeguard borders.
— Rahul Gandhi (@RahulGandhi) February 1, 2021
அதில், 2021-22 நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையானது, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் வேலைவாய்ப்பை உருவாக்க உதவும் வகையில் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் – சில முக்கியமான சொற்கள்
மேலும், “உயிர்களை காக்கும் வகையில் சுகாதாரத் துறைக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும். நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் வகையில், பாதுகாப்பு துறைக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.