நேற்று (நவம்பர் 18) சண்டிகரில் 31 விவசாயிகள் சங்கங்கள் சேர்ந்து நடத்திய கூட்டத்தில், மத்திய அரசு சரக்கு ரயில்களை மீண்டும் இயக்கத் தொடங்கியவுடன், பயணிகள் ரயில்களை இயக்க அனுமதிப்போம் என்று விவசாயிகள் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் ரயில் மறியல் போன்ற போராட்டங்களில் விவசாய சங்கங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து மத்திய அரசு பஞ்சாபுக்கான சரக்கு ரயில் போக்குவரத்தையும் நிறுத்தி விட்டதால் பஞ்சாப் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் – பாதிக்கப்படும் தொழிற்துறை – பாஜக, காங்கிரஸ் மோதல்
சண்டிகர் கூட்டத்திற்கு பின், விவசாய சங்கங்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அதில், “சரக்கு ரயில்களை இயக்குவதற்கான ஒரு சூழலை மத்திய அரசு முதலில் உருவாக்க வேண்டும். பின்னர் உடனடியாக பயணிகள் ரயில்கள் குறித்து சாதகமான முடிவை விவசாய சங்கங்கள் எடுக்கும்.” என்று அறிவித்துள்ளனர்.
பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களை ஒன்றாக இயக்க விவசாயிகள் அனுமதிக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் கோரிக்கை. இந்த மாதத் தொடக்கத்தில், எந்த ரயில்களை இயக்க வேண்டும், எந்த ரயில்களை இயக்கக்கூடாது என்று மாநில அரசு கூறவில்லை என்று ரயில்வே அமைச்சகம் கூறியிருந்ததாக ‘தி வயர்’ குறிப்பிட்டுள்ளது.
பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் – பாதிக்கப்படும் தொழிற்துறை – பாஜக, காங்கிரஸ் மோதல்
பஞ்சாபின் பொருளாதாரத்தை பாதிப்புக்குள்ளாக்கி இருக்கும் இந்த நிலைமையை சரி செய்ய விவசாயிகள் ஏன் முயற்சி எடுக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த கிராந்திகாரி விவசாய சங்கத்தின் தலைவர் டாக்டர் தர்ஷன் பால் சிங், “பஞ்சாப் மாநிலத்தின் இந்த பொருளாதார நிலைமைக்கு மத்திய அரசே காரணம்” என்று கூறியுள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் தொடரும் போராட்டம் – 12 விவசாயிகள் பலி
”புதுடில்லியில் மத்திய அமைச்சர்களைச் சந்தித்தபோது பஞ்சாபில் சரக்கு ரயில்களை மீண்டும் இயக்க மத்திய அரசை நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் அவர்கள் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை. இப்போது நாங்கள் சொல்வது என்னவென்றால் மத்திய அரசு சரக்கு ரயில்களை இயக்க அனுமதித்தவுடன், பயணிகள் ரயில்களையும் இயக்க நாங்கள் அனுமதிப்போம்.” என்று அவர் கூறியுள்ளார்.
விவசாயச் சட்டங்களுக்கு 50% விவசாயிகள் எதிர்ப்பு : ஆய்வில் முடிவு
மேலும், “விவசாயிகளும் இதனால் இழப்புகளை சந்திக்கிறார்கள். இந்த மறியல் போராட்டம் தொடர நாங்கள் விரும்பவில்லை.” என்று பதிலளித்ததாக ‘தி வயர்’ தெரிவித்துள்ளது.
பாரத விவசாய சங்கத்தின் (டகவுண்டா) தலைவர் ஜக்மோகன் சிங், ”விவசாயிகள் தெருவில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் மத்திய அரசை முதலில் நடவடிக்கை எடுங்கள் என்று சொல்கிறோம்.” என்று ’தி வயரிடம்’ தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கான சட்டமல்ல, முதலாளிகளுக்கான சட்டம் : ஜெயரஞ்சன் – வீடியோ
மேலும், “இதற்கு முன் போராட்டங்களின் போதும், போர்கள் நடக்கும் போதும் கூட, ரயில்வே நிர்வாகம் சரக்கு ரயில்களை இயக்க தடை விதிக்கவில்லை. பின் ஏன், பஞ்சாபை மட்டும் மத்திய அரசு தண்டிக்கிறது? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ரயில்வே துறையின் இழப்புகள்
நவம்பர் 16-ம் தேதி, ரயில்வே துறை அமைச்சர் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது, விவசாயிகளின் இந்த தொடர் போராட்டத்தால் 1,986 பயணிகள் ரயில்களும், 3,090 சரக்கு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன் காரணமாக சரக்கு ரயில்களின் வருவாயில் மட்டும் ரூபாய் 1,670 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
விவசாய மசோதாக்கள் : உள்ளூர் வணிகர்களுக்கு பதில் கார்ப்பரேட்டுகள்
மேலும், பஞ்சாபில் உள்ள ஐந்து மின் உற்பத்தி நிலையங்களுக்கு 520 ரேக் நிலக்கரிகள் கொடுக்கப்படவில்லை. இதனால் ரயில்வே துறைக்கு 550 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மாநிலத்தில் சுமார் 600 சரக்கு கண்டெய்னர்கள் ரத்து செய்யப்பட்டு, சுமார் 120 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளன என்றும் மேலும் 70 சரக்கு கண்டெய்னர்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் ரூபாய் 15 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ‘தி வயர்’ குறிப்பிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.