Aran Sei

இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது பப்ஜி மொபைல் கேம்

ன்று முதல் இந்தியாவில், பப்ஜி விளையாட்டிற்கு முற்றிலுமாகத் தடை விதிக்கப்படுகிறது. பிளே ஸ்டோரில் பப்ஜி நீக்கப்பட்டிருந்த நிலையில், ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்களுக்கும் இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குத் தடையாக இருப்பதாகக் கூறி, பப்ஜி உள்ளிட்ட 117 சீனச் செயலிகளுக்குத் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தடை விதித்தது. அதற்கு முன்னதாக, கடந்த ஜூன் மாதம் டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளும் ஜூலை மாதம் 47 செயலிகளும் தடை செய்யப்பட்டன.

பப்ஜி, தென்கொரிய வீடியோ கேம் நிறுவனமான ப்ளூஹோலுக்குச் சொந்தமானது என்றாலும், பதிப்புரிமை சீனாவின்டென்செண்ட் நிறுவனத்திடம் உள்ளது.

இந்திய – சீன எல்லைப் பதற்றத்தைத் தொடர்ந்து சீனாவிற்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சீனாவின் மொபைல் ஆப்கள் ரத்து செய்யப்பட்டு வருவதும் அடங்கும்.

அமெரிக்க-சீன வர்த்தகப் போர்: யாருக்கு அடி பலம்?

அதனால், பப்ஜிக்கும் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பப்ஜி கார்ப்பரேஷன் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், பப்ஜி ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உத்தரவுப்படி, பப்ஜி மொபைல் மற்றும் பப்ஜி மொபைல் லைட் ஆகிய செயலிகளும் சேவைகளும் இன்று (அக்டோபர் 30) முதல் முழுவதுமாக நிறுத்தப்படுகிறது என்று கூறியுள்ளது.

மேலும், பயனாளர்களின் தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதுதான் எங்களின் முதன்மையான நோக்கம். எனவே, இந்தியாவின் தகவல் பாதுகாப்புச் சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு உடன்பட்டு நடக்க விரும்புகிறோம். எங்களின் சேவையை நிறுத்திக்கொள்வதற்கு மிகவும் வருந்துகிறோம் என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பப்ஜி மொபைல் ஆப்பிற்கு அளித்து வந்த உங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இனி பப்ஜியை இந்தியப் பயனாளர்கள் யாரும் பயன்படுத்த முடியாது. கூகுல் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பில் ஐஓஎஸ் ஆப் ஸ்டோரில் இருந்து பப்ஜி ஆப் நீக்கப்படுகிறது. மேலும், ஏற்கனவே டவுன்லோடு செய்து வைத்திருப்பவர்களுக்கும் செயலி வேலை செய்யாது. இந்தியாவில் உள்ள பப்ஜி சர்வர்களும் முடக்கப்படுகின்றன.

அதேநேரம், பப்ஜி விளையாட்டின் கன்னிகளுக்கான செயலி தடை விதிக்கப்படவில்லை. ஏனென்றால், இதன் முழு உரிமையும் தென் கொரியாவின் ப்ளூஹோல்  நிறுவனத்திடம் இருக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்