இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் திட்டத்தைப் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக நன்கு அறிந்த நபர் ஒருவரின் கூற்றின்படி, எல்.ஐ.சியின் பங்குகளை பெரிய அளவில் விற்க முடிவு செய்யப்பட்டிருப்பதால், ஒரு வெளிநாட்டு முதலீட்டாளரால் அதிக எண்ணிக்கையிலான பங்குகளை வாங்க முடியும்.
எந்த ஒரு முதலீடும் ஒரு குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டதாக இருக்கும், ஆனால் அது எந்த மட்டத்தில் அமைக்கப்படும் என்பது தெரியவில்லை என அவர் கூறினார்.
இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அரசு நிர்வகிக்கும் வங்கிகளில் 20 விழுக்காடு வரை அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் மிகப்பெரிய பங்கு வழங்கல் நிகழ்வான எல்.ஐ.சியின் பங்கு விற்பனையில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம், ஓய்வூதிய நிதிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களை பங்குகள் வாங்க அனுமதிக்க முடியும்.
10 விழுக்காட்டிற்கு அதிகமான பங்குகள் வாங்கப்படுவதை அன்னிய நேரடி முதலீடு என ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது.
எல்.ஐ.சியில் 100 சதவீத பங்குகளை வைத்திருக்கும் மோடி தலைமையிலான பாஜக அரசு, 2022 ஆம் ஆண்டு வரையிலான நிதிநிலையில் ஏற்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி இடைவெளியை 6.8 விழுக்காடாக குறைக்கும் வகையில் இந்த பங்கு விற்பனை பார்க்கிறது.
எல்.ஐ.சியின் சொத்துகள் மற்றும் அதன் மதிப்புகளை வைத்துப் பார்க்கும்போது எல்.ஐ.சியின் 26,100 கோடி அமெரிக்க டாலராக பங்கு சந்தையில் மதிப்பிடப்படும் ஜெப்ரீஸ் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் எழுதியிருந்தனர்.
பெரும்பாலான இந்திய காப்பீட்டு நிறுவனங்களிலும், 74 விழுக்காடு வரை நேரடிய அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இது எல்.ஐ.சிக்கு பொருந்தாது. ஏனெனில் இது நாடாளுமன்றத்தின் செயலால் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு நிறுவனம் என அந்த நபர் குறிப்பிட்டார்.
மேலும், அன்னிய நேரடி முதலீடு தொடர்பான விவாதங்கள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன, இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக கருத்துக்களை அறிய நிதி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
Source : Bloomberg
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.