Aran Sei

‘தனியார் ரயில்களுக்கு 30,000 கோடி முதலீடு வேண்டும்.’ – ரயில்வே துறை அறிக்கை

தனியார் ரயில்களை இயக்குவதற்கான திட்டத்தில் ரூபாய் 30,000 கோடி ரூபாய் தனியார் முதலீட்டை எதிர்பார்ப்பதாக இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

நேற்று (நவம்பர் 19), இந்தியாவில் தனியார் துறையில் 121  ரயில்களை இயக்குவது தொடர்பான திட்டத்தில் பங்கேற்க விண்ணப்பித்திருந்த நிறுவனங்கள் குறித்த அறிக்கை ஒன்றை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. அதில், எல்&டி, ஜிஎம்ஆர், வெல்ஸ்பன் போன்ற நிறுவனங்கள்  தகுதியுடையவை என்று தெரிவித்துள்ளது.

‘மீண்டும் தனியார்மயமாக்கல்’ – நிதி ஆயோக் ஆலோசனை

12 வழித்தடங்களுக்கு, 16 நிறுவனங்களிலிருந்து 120 விண்ணப்பங்களைப் பெறப்பட்டு, அதில் 102 விண்ணப்பங்கள் தகுதியானவை என்று அறிவித்துள்ளது.

முதன்முறையாகத் தனியார் பயணிகள் ரயில்களை இயக்குவதற்கான இந்தத் திட்டத்திற்கு, ரூபாய் 30,000 கோடி தனியார் முதலீட்டை ரயில்வே நிர்வாகம் எதிர்பார்ப்பதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சந்தையில் விலைக்கு வரும் இந்திய ரயில் தடங்கள்

இந்தத் திட்டத்தில் பங்குகொள்ள போகும், தனியார் நிறுவனங்கள் இரண்டு கட்ட சோதனைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும். ஒன்று தகுதிக்கான கோரிக்கை (ஆர்.எஃப்.க்யூ), அதைத் தொடர்ந்து முன்மொழிவுக்கான கோரிக்கை (ஆர்.எஃப்.பி).

கடந்த ஜூலை 1 ஆம் தேதி, இதற்கான முதற்கட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அக்டோபர் 7 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. மொத்தம் 16 நிறுவனங்களிலிருந்து 120 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

ஏலத்திற்கு வரும் ஏர் இந்தியா – விற்பனைக்கு வரும் பொதுத்துறை நிறுவனங்கள்

”ரயில்வே அமைச்சகம் விண்ணப்பங்களின் தகுதி மதிப்பீட்டுச் சோதனையை நிறைவு செய்துள்ளது. 120 விண்ணப்பங்களில், 102 விண்ணப்பங்கள் தகுதிக்கான (ஆர்.எஃப்.க்யூ) சோதனையில் தேர்ச்சிபெற்றவை” என்று அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அரவிந்த் ஏவியேஷன், பிஹெச்எல், கியூப் நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு பிரைவேட் லிமிடெட் , கேட்வே ரெயில் சரக்கு லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இதில் அடங்கும்.

லட்சுமி விலாஸ் வங்கி : இலாபம் தனியாருக்கு, இழப்பு மக்களுக்கா ?

அதிக வருவாய் தரும், டெல்லி மற்றும் மும்பை வழித்தடத்தில் விண்ணப்பித்த நிறுவனங்கள் அதிக அக்கறை காட்டியுள்ளன.

மும்பை மற்றும் டெல்லி வழித்தடத்தில் தலா 19 நிறுவனங்களின் விண்ணப்பங்கள் தகுதிபெற்றுள்ளன. சண்டிகர் மற்றும் சென்னை வழித்தடம் ஐந்து தகுதியான விண்ணப்பதாரர்களை பெற்றுள்ளது.

தனியார் துறையில் சமூக அநீதி: அதிகரிக்கும் வருமான ஏற்றத்தாழ்வுகள்

பிரயாகராஜ், ஜெய்ப்பூர் மற்றும் செகந்திராபாத் வழித்தடங்களில் தலா ஒன்பது விண்ணப்பதாரர்களும், ஹவுரா, பெங்களூரு மற்றும் பாட்னா வழித்தடத்தில் தலா எட்டு விண்ணப்பதாரர்களும் தகுதி பெற்றுள்ளனர்.

2023 மார்ச் மாதத்திற்குள், இந்திய ரயில்வே 12 தனியார் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. 2027 ஆண்டுக்குள், 151 தனியார் ரயில் சேவைகளை கொண்டு வர ரயில்வே திட்டமிட்டுள்ளன.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்