Aran Sei

இந்தியா வெளிநாடுகளுக்கு சுமார் 42 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது – நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சகம் தகவல்

மாநிலங்களவையில், லோக் தந்த்ரிக் ஜனதா தளத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், எம்.வி.ஷ்ரயேம்ஸ் குமார் நிதி அமைச்சரிடம் சில கேள்விகளை முன் வைத்திருந்தார். அதில்,

  • சில நாடுகள் இந்தியாவின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக நிதி உதவிகள் செய்து வருகிறதா? அது உண்மை என்றால், கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்தெந்த நாடுகளிடம் இருந்து எந்தெந்த காலகட்டத்தில், எவ்வளவு நிதியுதவி பெறப்பட்டுள்ளது?
  • மற்ற நாடுகளின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக இந்தியாவும் நிதி உதவிகள் செய்து வருகிறதா? அது உண்மை என்றால், கடந்த இரண்டு ஆண்டுகளில், எந்தெந்த நாடுகளுக்கு, எந்தெந்த ஆண்டுகளில், எவ்வளவு நிதி அளிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியிருந்தார்?

‘கொரோனாவால் நாடு முழுவதும் 109 சுகாதார பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்’ – ஒன்றிய அரசு தகவல்

இதற்கு  எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள, ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, முதல் கேள்விக்கு அளித்துள்ள பதிலில், ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகளில்  இருந்து இந்தியாவின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக நிதியுதவி பெறப்படுகிறது என்று கூறியுள்ளார். எந்தெந்த நாடுகளிலிருந்து எவ்வள நிதி உதவி பெறப்பட்டுள்ளது என்ற பட்டியலையும் அவர் அளித்துள்ளார்.

 

‘பெகசிஸ் குறித்து விவாதிக்காமல் நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம்’ – நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந் சாவந்த்

 

நாடுகள் 2019-20 (கோடி) 2020-21 (கோடி) 2021-22 (கோடி)
ஜப்பான் 14128.39 15574.67 1390.30
ஜெர்மனி 2071.98 6437.40 539.06
பிரான்ஸ் 1397.33 2297.83 243.19
ரஷ்யா 2709.25 3150.18 748.46
20,306.95 27,460.08 2921.01

 

கடந்த மூன்று ஆண்டுகளில் அரசியல் காரணங்களினால் 230 பேர் கொல்லப்பட்டுள்ளனர் – ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தகவல்

மற்ற நாடுகளின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக இந்தியாவும் நிதி உதவிகள் செய்து வருகிறதா என்ற கேள்விக்கு, மற்ற நாடுகளின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக இந்தியா நிதியுதவியை அளித்து வருவதாக கூறியுள்ள அமைச்சர் பங்கஜ் சவுத்ரி. அங்கோலா, பொலிவியா உட்பட 29 நாடுகளுக்கு கடனாக சுமார் 41,420 கோடி  இந்தியா வழங்கியிருப்பதாகவும், நிதியுதவியாக 9 நாடுகளுக்கு இது வரை, 3,922.55 கோடி வழங்கப்பட்டிருப்பதாகவும் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்