Aran Sei

’பொருளாதார ஆய்வறிக்கையின் நோக்கம் மாறிவிட்டது’ – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

துறைரீதியான கட்டமைப்பில் செய்துள்ள சீர்திருத்தங்களின் ஒரு பகுதி என்று, விவசாய சட்டங்களையும் புதிய தொழிலாளர் சட்டங்களையும் முன்னிறுத்தும் மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையை முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியான ட்வீட்டுகளை பகிர்ந்துள்ளார்.

அதில், “ஆய்வறிக்கையின்படி, முதல் மூன்று ‘துறை ரீதியான கட்டமைப்பு சீர்திருத்தங்களான’  விவசாய விரோத சட்டங்கள்,  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான புதிய வரையறை மற்றும் நான்கு தொழிலாளர் சட்டங்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.” என்று அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு : பொருளாதார மறுமலர்ச்சியல்ல – பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்

“விவசாயிகள் மூன்று விவசாய சட்டங்களையும் நிராகரித்துள்ளனர். இதில் தங்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை என்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் தெரிவித்துள்ளனர்.  தொழிற்சங்கங்கள் நான்கு தொழிலாளர் சட்டங்களையும் நிராகரித்துவிட்டன. சீர்திருத்தம் என்றால் மக்கள் நிராகரிப்பது என்ற பொருள் உருவாகத் தொடங்கியுள்ளது. இது சீர்திருத்தம்  மற்றும் ஜனநாயகம்  என்பதற்கான புதிய பொருள் ஆகும்.” என்று ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இந்த ஆண்டின் ஆய்வறிக்கையில் பயன்படுத்தப்பட்ட மொழியைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், “முன்னர், பொருளாதார அறிக்கைகள் எளிய மொழியில், மக்கள் புரிந்துக்கொள்ளும் படியாக இருந்தது. ஆனால் இப்போது அதன் நோக்கம் மாறிவிட்டது.” என்று தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை ஏன் ரத்து செய்ய வேண்டும்? – மத்திய அமைச்சருக்கு பொருளாதார வல்லுநர்கள் விளக்கம்

மேலும்,“பொருளாதார அறிக்கையில், பின்னடைவு என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொல். தற்போதைய அரசு ’மந்தநிலை’ என்பதற்கான அர்த்தத்தை நமக்குக் கற்றுத் தந்துள்ளது. ’மந்தநிலை’ மற்றும் ’பின்னடைவு’ என்ற சொல்லுக்கான அர்த்தங்களை மட்டும் நீங்கள் தெரிந்து வைத்துக்கொண்டால் போதும், ​​அடுத்த பொருளாதார அறிக்கை எழுதும் அணியில் சேர்வதற்கான தகுதியை நீங்கள் பெற்றுவிடுவீர்கள்.” என்று மத்திய அரசின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்