Aran Sei

’பொதுத்துறை நிறுவனங்களை திவாலாக்கி, அவற்றை தனியார்மயமாக்கும் மத்திய அரசு’ – பட்ஜட் குறித்து காங்கிரஸ் விமர்சனம்

பொதுத்துறை நிறுவனங்களை திவாலாக்கி அதன் வழியாக, அவற்றை  தனியார்மயமாக்கும் நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுவதாக ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

நேற்று (பிப்பிரவரி 1), மூத்த காங்கிரஸ் தலைவர்களான முன்னாள் நிதியமைச்சரும் ப.சிதம்பரமும் பாதுகாப்புத்துறை முன்னாள் அமைச்சர் ஏ.கே.ஆண்டனியும் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து விமர்சனங்களை வைத்துள்ளனர்.

’ஒருபக்கம் சுயசார்பு இந்தியா; மறுபக்கம் அந்நிய முதலீட்டுக்கு பட்டுக் கம்பளம்’ – பட்ஜெட் குறித்து முத்தரசன்

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசிய போது,“இந்த பட்ஜெட்டில் பொதுத்துறை வங்கிகளில் உள்ள வாராக் கடன்களை சரி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார். இதற்காக சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் உருவாக்கப்பட்டு, பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன்களைக் கைப்பற்றி நிர்வகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். மேலும் பொதுத்துறை வங்கிகளின் மூலதனத்துக்கு ரூ. 20,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆனால் மத்திய அரசின் நடவடிக்கைகள் பொதுத்துறை வங்கிகளை பாதுகாப்பது அல்ல. மாறாக, அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக திவாலாகி முழுவதுமாக தனியார்மயமாக்கப் படுவதற்கான சூழலுக்குத் தள்ள வைப்பதுதான்.” என்று ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளதாக தி எக்னாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘விவசாயிகளுக்கு எதிரான பட்ஜெட்டில் வெட்டிச் சுருக்கப்படும் அவர்களுக்கான நிதி’ – கே.பாலகிருஷ்ணன்

எந்தெந்த மாநிலங்களில் தேர்தல் வர இருக்கிறதோ அந்தந்த மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம் மற்றும் அசாமில் அதிக சலுகைகள் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இவை செயல்படுத்தப்பட மிக நீண்ட காலம் எடுக்கும். இவை மக்களை ஏமாற்றும் திட்டங்கள் மட்டுமே. சரக்கு மற்றும் சேவை வரிகளில் எந்த வரி குறைப்பும் செய்யவில்லை. இந்த பட்ஜெட் முழுக்க முழுக்க பணக்காரர்களுக்கு ஆனது சாமானிய மக்களுக்கானது அல்ல.” என்று விமர்சித்துள்ளதாக தி எக்னாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

மத்திய பட்ஜெட் 2021: இந்தியாவின் சொத்துக்கள் முதலாளிகளிடம் விற்கப்பட இருக்கிறது – ராகுல் காந்தி

பட்ஜெட் குறித்து பேசிய பாதுகாப்புத்துறை முன்னாள் அமைச்சர் ஏ.கே.ஆண்டனி, “அருணாச்சல பிரதேசத்தில் இருந்து சிக்கிம் வரையும், கிழக்கு லடாக்கில் இருந்து உத்தரகண்ட் வரையும் சீன நாட்டு ஊடுருவலின் அச்சுறுத்தல் காரணமாக, சீன-இந்திய எல்லையில் எழுந்துள்ள ஆபத்துகளைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புத் துறைக்கான வரவு செலவுத் திட்டத்தில் கணிசமான நிதி அதிகரிக்க வேண்டும் என்று எல்லா வகை பாதுகாப்புப்படைகளும் கோரியிருந்தன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீத ஒதுக்கீட்டையே இந்த பட்ஜெட் நாங்கள் கோரினோம்.” என்று கூறியுள்ளார்.

மேலும், “பாதுகாப்புத்துறைக்கான இந்த குறைந்த நிதி ஒதுக்கீடு ஒரு துரோக செயலாக இருக்கிறது. இந்த நிதி ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்து, பாதுகாப்புக்கு கணிசமான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று நிதியமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.” என்று வலியுறுத்தியுள்ளதாக தி எக்னாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திறமையில்லாத கார் மெக்கானிக் ஒருவர் தனது வாடிக்கையாளரிடம், ’என்னால் உங்கள் காரின்பிரேக்கை சரி செய்ய முடியவில்லை. எனவே, காரின் ஹாரன் சத்தத்தை அதிகமாக வைத்துள்ளேன்’ என்று கூறுவதைப் போல பாஜக அரசு செயல்படுகிறது.” என்று விமர்சித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்