Aran Sei

பாலியல் குற்றவாளிகளுக்கு போனஸ் கிடையாது – மத்திய அரசு

பாலியல் குற்றத்திற்குத் தண்டனை பெற்றவர்களுக்கு நிறுவனங்கள் போனஸ் மற்றும் நிலுவைத்தொகையை வழங்கத் தேவையில்லை என்ற புதிய விதியை மத்திய அரசு கொண்டு வரவுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

போனஸ் வழங்கல் சட்டம் 1956க்குப் பதிலாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஊதிய சட்டத்திற்கான விதிகள் வெளியிடப்படவுள்ளன. அந்த விதிகள் அரசிதழில் வெளியான பிறகு அவை நடைமுறைக்கு வரவுள்ளன. புதிய விதிகளில் “பாலியல் குற்றத்தில் தண்டிக்கப்பட்டவர்” என்ற சொல், போனஸ் மறுக்கப்படுவதற்கான காரணத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தி இந்து கூறுகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தில் ஏமாற்றுதல், வன்முறையில் ஈடுபடுதல், திருடுதல் மற்றும் நாசவேலை செய்தல் ஆகிய குற்றத்திற்காக வேலை இழந்தவர்களுக்கு போனஸ் மறுக்கப்படும்.

நடைமுறையில் உள்ள சட்டத்தில், வேலை செய்யும் இடத்தில் இதுபோன்ற குற்றங்களைச் செய்பவர்களுக்கு மட்டுமே போனஸ் மறுக்கப்படும். ஆனால், புதிய விதிகளின்படி, வேலை செய்யும் இடத்திற்கு வெளியில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவருக்கும் போனஸ் மறுக்கப்படும் என்று கூறுப்படுகிறது.

போனஸ் வழங்கல் சட்டம் 1956ன் படி, மாத வருமானம் 21 ஆயிரத்திற்கு மிகாமல் உள்ளவர்களுக்கு, ஆண்டு வருமானத்தில் 8.33% முதல் அதிகபட்சமாக 20% வரை போனஸ் வழங்கப்பட வேண்டும். ஆனால், புதிய சட்டத்தின்படி போனஸ் கணக்கிடுவது தொடர்பாக இதுவரை விதிகள் வகுக்கப்படவில்லை.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்