பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏல முறைகள் குறித்த ஆராய்ச்சிக்காக, ஆய்வாளர்கள் பால் ஆர்.மில்க்ரோம் மற்றும் ராபர்ட் பி வில்சனுக்கு இந்த ஆண்டின் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING NEWS:
The 2020 Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel has been awarded to Paul R. Milgrom and Robert B. Wilson “for improvements to auction theory and inventions of new auction formats.”#NobelPrize pic.twitter.com/tBAblj1xf8— The Nobel Prize (@NobelPrize) October 12, 2020
இந்த ஆய்வாளர்களின் பங்களிப்பான ஏல கோட்பாடின் மேம்பாடு , ஏலத்திற்கான புதுவகை வடிவமைப்புகள் மூலம் உலகெங்கும் உள்ள விற்பனையாளர்கள், கொள்முதலாளர்கள் மற்றும் வரி செலுத்துவோர் பயனடைவதாகவும் நோபல் பரிசு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
வரி செலுத்துவோர் மற்றும் குடிமக்களுக்கு ஏலத்தின் விளைவுகளும் மிகவும் முக்கியம். ஏலம் ஒவ்வொரு மட்டத்திலும் நம் அனைவரையும் பாதிக்கிறது. ஏலம் மிகச் சாதாரணமான ஓர் அம்சமாக மாறியிருப்பதோடு, சிக்கலுக்குரியதாகவும் இருந்து வருகிறது.
மின்சாரக் கட்டணத்தை முடிவு செய்தும், நாம் பயன்படுத்தும் பொருட்களின் விலையை நிர்ணயித்தும், ஏலம் பொது மக்களின் வாழ்வில் பெரிய தாக்கத்தைச் செலுத்துகிறது.
இந்த இரண்டு ஆய்வாளர்களும், ஏலம் எவ்வாறு செயல்படுகிறது, ஏலதாரர்களின் நடைமுறை என்ன என்பதைத் தெளிவுபடுத்தித் தத்துவ ரீதியிலான கண்டுபிடிப்புகள் மூலம் முற்றிலும் புதிய ஏல வடிவங்களை அமைத்துள்ளார்கள்.
பாரம்பரிய ரீதியில் விற்கக் கடினமாக இருக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்குப் புதிய ஏல வடிவங்கள் வடிவமைத்துள்ளார்கள்.
ராபர்ட் வில்சன் ஒரு பொதுவான மதிப்பைக்கொண்டு பொருட்களின் ஏலத்திற்கான கோட்பாட்டை உருவாக்கியுள்ளார். தொடக்கத்தில் நிச்சயமற்றதாக இருக்கும் இந்த மதிப்பு, இறுதியில் எல்லோருக்கும் ஒரே மதிப்பைக்கொண்டதாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பால் ஆர்.மில்க்ரோம் உருவாக்கியுள்ள கோட்பாடு இன்னும் பொதுவானது. பொதுவான மதிப்பை அனுமதிப்பதோடு, ஏலதாரரைப் பொறுத்து வேறுபடும் தனிப்பட்ட மதிப்புகளையும் அனுமதிக்கிறது.
இந்த ஆண்டு பொருளாதார அறிவியலில் நோபல் பரிசு பெற்றுள்ளவர்கள் அடிப்படைக் கோட்பாட்டில் தொடங்கி, அவர்களின் ஆய்வு முடிவுகளை நடைமுறைப் பயன்பாட்டில் இணைத்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்புகள் சமூகத்திற்கு மிகவும் பயனளிக்கும்.” என நோபல் பரிசு குழுவைச் சேர்ந்த பீட்டர் ஃப்ரெட்ரிக்சன் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு பொருளாதார அறிவியலுக்கான நோபல், உலகளாவிய வறுமையைக் குறைப்பதற்கான ஆய்வுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அபிஜித் பானர்ஜி உட்பட மூன்று ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.