Aran Sei

யப்ப்பா.. அம்பானி வருமானம் இவ்வளவா?

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் இருந்து முகேஷ் அம்பானியின் வருமானம், ஒரு மணி நேரத்திற்கு ரூ 90 கோடியாக இருக்கிறது. இதன் மூலம் ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் இந்திய நிறுவனம் வெளியிடம் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக முதல் இடத்தில் உள்ளார்.

உலக பணக்காரர்கள் பட்டியில் முதல் ஐந்து இடத்தில் இடம் பெற்ற ஒரே இந்தியர் முகேஷ் அம்பானி தான். பேஸ்புக், கூகுல், சில்வர் லேக் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்ததன் மூலமாகவும், தன் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களின் வருமானம் மூலமாகவும் மொத்தம் ரூ 2,77,700 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இதன் மூலம் அவரின் மொத்த சொத்து  மதிப்பு ரூ 6,58,400 கோடியாக உயர்ந்துள்ளது.

அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு என்பது இந்தப் பட்டியலில் அவருக்கு அடுத்துள்ள ஐந்து பணக்காரர்களின் சொத்து மதிப்பின் கூட்டுத்தொகையை விட அதிகம் என்றும், இதன் மூலம் ஆசிய கண்டத்திலேயே பெரிய பணக்காரர் என்ற பெயரோடு உலக அளவில் நாலாவது பெரிய பணக்காரர் என்ற பெயரையும் பெறுகிறார் என்கிறது ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் அமைப்பின் அறிக்கை.

அந்த அமைப்பு ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள இந்திய பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் உள்ள 828 இந்தியர்களில், 627 பேரின் சொத்து முன்பைவிட இந்தாண்டு உயர்ந்துள்ளது. இந்தப் பட்டியலில் மேலும் 162 பேர் புதிதாக இணைந்திருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் உள்ள முதல் நூறு பணக்காரர்களின் சொத்து மதிப்பு, பட்டியலில் உள்ளவர்களின் மொத்த கூட்டுத்தொகையில் 64 சதவிதத்தை கொண்டுள்ளது.

நன்றி : the indian express

ஹுருன் இந்தியா அமைப்பின் நிர்வாக இயக்குனரும் தலைமை ஆராய்ச்சியாளருமான அனஸ் ரஹ்மான், “இந்த பட்டியலில் உள்ள 28 சதவீத சொத்து முகேஷ் அம்பானியுடையது. இந்த அளவு வருமானத்தை எண்ணெய், தொலைத்தொடர்பு மற்றும் சில்லறை வர்த்தகம் போன்ற வெவ்வேறு தொழில்கள் மூலம் ஈட்டியுள்ளார்.” என்கிறார்.

மேலும், “புதுமையான தொழில் தொடக்கங்களாலும், நல்ல தொழில் திறன் உள்ள குடும்ப தொழில்களாலும் முதலீட்டாளர்களும் இந்தியாவை நம்புகிறார்கள். இந்திய மக்கள் தொகை அவர்களுக்கு நட்டத்தை தரவில்லை. மேலும் இந்த வளர்ச்சி பாதி அளவையே எட்டியுள்ளது. இன்னும் வளரும்” என்கிறார்,

லண்டனை சேர்ந்த ஹிந்துஜா சகோதரர்கள் சொத்து மதிப்பு ரூ 1,43,700 கோடியுடன் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்கள். ஹெச்சிஎல் நிறுவனர் சிவ் நாடார் ரூ 1,41,700 கோடியுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். அதானி நிறுவனத்தின் கௌதம் அதானி நாலாவது இடத்தையும், விப்ரோ நிறுவனத்தின் அஸிம் ப்ரேம்ஜி ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர். அவென்யு சூப்பர்மார்ட்ஸ் நிறுவனர் ராதாகிருஷ்ணன் முதன் முதலாக பட்டியலில் இடம் பெற்று, ஏழாவது இடத்தை பிடித்துள்ளார்.

பட்டியலில் உள்ள 828 பணக்காரர்களுடைய மொத்த சொத்தின் கூட்டுத்தொகை ரூ 60,59,500 கோடியாக உள்ளது. சென்ற ஆண்டை விட ரூ 10,29,400 கோடி அதிகரித்திருக்கிறது.

பட்டியலில் 40 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். அதாவது 5 சதவீதம் இடத்தை பெண்கள் பிடித்துள்ளனர். அதில் பத்து பெண்கள் எவ்வித பணக்கார பின்புலமும் இல்லாமல் வந்தவர்கள்.

கோத்ரேஜ் நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை வாரிசான ஸ்மீதா வி க்ரிஸ்னா ரூ 32,400 கோடி சொத்துடன் பட்டியலில் முன்னணியில் இருக்கும் பெண்ணாக உள்ளார். அவரை தொடர்ந்து, பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார் ஷா ரூ 31,600 கோடியுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்