Aran Sei

தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சலுகை – நிலுவை தொகையை செலுத்த 4 ஆண்டு அவகாசம்

Credits : PTI

தொலைதொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகைகளை செலுத்த வேண்டும் என நெருக்கடிகள் அதிகரித்து வந்த சூழலில், தொலை தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத்தொகைக்கன கால அவகாசத்தை நான்கு ஆண்டுகள் வரை நீட்டித்தும், அந்நிய நேரடி முதலீட்டை 100% அதிகரித்தும் ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு, தொலைதொடர்பு துறையில் ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோவின் வருகையும், அதன் இலவச திட்டங்களும், அத்துறையில் கடும் குழப்பங்களை ஏற்படுத்தின. இதனால் தொலை தொடர்பு துறையில் போட்டியை சமாளிக்க முடியாமல்  பல நிறுவனங்கள் வெளியேறின. கடும் போட்டியை சமாளிக்க வோடோஃபோன் நிறுவனமும், பிர்லாவின் ஐடியா நிறுவனமும் இணைந்து வோடோஃபோன் ஐடியா லிமிட்டம்(விஐஎல்) என்ற நிறுவனத்தை உருவாக்கின. இதன் பிறகும் வோடாஃபோன் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்த நிலையில், ஆறு வாரங்களுக்கு முன்பு அந்த நிறுவனத்தின் இந்திய தலைவர் பொறுப்பை வகித்த தொழிலதிபர் பிர்லா குமாரமங்கலம் பதவியிலிருந்து வெளியேறினார்.

தொலைதொடர்பு அமைச்சகத்தின் தரவுகளின் படி, பாரதி ஏர்டெல், வோடோஃபோன் ஐடியா, ரிலையன்ஸ் கம்யுனிகேஷன் ஆகிய நிறுவனங்கள் அரசு வழங்கியுள்ள உரிமத்திற்காக ரூ 92,000 கோடியும், அலைக்கற்றைக்காக (Spectrum) ரூ 41,000 கோடியும் செலுத்த வேண்டும் என என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் சூழலில் தொலை தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகைக்கன கால அவகாசத்தை நான்கு ஆண்டுகள் வரை நீட்டித்தும், அந்நிய நேரடி முதலீட்டை 100% அதிகரித்தும் ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட வரியை விட 87.5 விழுக்காடு வரியை குறைத்து தாக்கல் செய்த ரிலையன்ஸ் – சட்டத்தின் ஓட்டைகள் பயன்படுத்தப்படுகிறதா?

ஒவ்வொரு தொலைதொடர்பு நிறுவனமும், அலைக்கற்றையை (பயன்படுத்துவதற்காகவும், உரிமத்திற்காவும்) ஒவ்வொரு ஆண்டும் தங்களின் மொத்த வருவாயில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை (AGR) அரசுக்கு செலுத்த வேண்டும் .இதை மாற்றியுள்ள அரசு, நிலுவை தொகைக்கான கால அவகாசத்தை நான்கு ஆண்டுகள் வரை நீட்டித்துள்ளது. இந்த காலத்தில், அந்நிறுவனங்கள் அரசுக்கு இரண்டு சதவீத வட்டியை வழங்க வேண்டும் எனவும் தொலைதொடர்புத்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திவாலாகும் நிலைமையில் இருக்கும் வோடோஃபோன் ஐடியா நிறுவனம் : 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி நஷ்டத்தை சமாளிக்குமா இந்தியா?

இது தொடர்பாக தொலைதொடர்புத்துறை அமைச்சர், அஷ்வினி வைஷ்னவ், செய்தியாளர்களிடத்தில் பேசுகையில், “ இன்றைய தினம் (15.09.21) பிரதமர் நரேந்திர மோடி, மொத்த வருவாயில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை (AGR) அரசுக்கு செலுத்த வேண்டும் எனும் விதியில் ஒரு சிறப்பு வாய்ந்த முடிவை எடுத்த்துள்ளார். ஒரு நிறுவனத்தில், தொலைதொடர்புத்துறையை சாராத வருமானங்கள் மொத்த வரி வருவாயில் சேர்த்துக் கொள்ளப்படாது. ஒரு காலத்தில் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அதிகமான வட்டி, உரிமத்துக்கான கட்டணம், அலைக்கற்றைக்கான கட்டணம், அபராதம், அபராதத்துக்கான வட்டி என கடும் விதிகள் இருந்தன. இது தற்போது சீர்திருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தொலைதொடர்பு துறையில் அதிகளவிலான முதலீடுகள் கிடைக்கும். முதலீடுகள் என்றால் வேலைவாய்ப்பு, எவ்வளவு அதிகம் முதலீடுகள் அதிகரிக்கிறதோ அவ்வளவு அதிகமாக வேலைவாய்புகள் உருவாகும்” என்று தெரிவித்துள்ளார்.

அனில் அம்பானிக்கு ரூ.4,600 கோடி இழப்பீடு வழங்கி தீர்ப்பு – பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவாரா?

”அரசாங்கத்தின் வருவாய் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே தொலைதொடர்பு நிறுவனங்கள் பணத்தை திருப்பி செலுத்த வேண்டிய காலத்திற்கு ( 4 ஆண்டுகள்) 2% வட்டித்தொகையை அரசிடம் செலுத்தும். இந்த காலத்தில், அரசுக்கு வரும் வட்டித்தொகையை கொண்டு, இந்தியாவின் தொலைதொடர்பு கட்டுமானம் மேம்படுத்தப்படும்” எனவும் தொலைதொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்