Aran Sei

பிரதமரின் சுற்றுப்பயணங்கள்: யாருக்கு இலாபம்?

credit: india.com

பிரதமர் நரேந்திர மோடி 2015-ம் ஆண்டிலிருந்து 58 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார் என்றும் அதற்கு ரூ 517 கோடி செலவு ஆகியுள்ளது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் முரளிதரன் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை (செப்டம்பர் 22) மாநிலங்களவையில் 2015-ம் ஆண்டிலிருந்து பிரதமர் எத்தனை நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்; அந்நாடுகளின் பெயர்களை என்னென்ன? அப்பயணங்களுக்கு ஆகிய செலவு என்ன? அந்த சுற்றுப்பயணத்தின் விளை பயன் என்ன? என்ற கேள்விகள் கேட்கப்பட்டன.

மோடி, அமெரிக்கா, ரசியா, சீனா போன்ற நாடுகளுக்கு அடிக்கடிக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். அதேபோல், சிங்கப்பூர், ஜெர்மனி, ஃப்ரான்ஸ், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பல முறை சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

மோடியின் பயணங்களுக்காகிய மொத்த செலவு ரூ 512 கோடி என்றும் அவர் இதுவரையில் 58 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார் என்றும் முரளிதரன் கூறினார்.

பிராந்திய மற்றும் உலக பிரச்சினைகள் பற்றிய இந்தியாவின் பார்வையை பன்னாட்டு அரங்கில் தெளிவாக முன்வைப்பதற்கு இப்பயணங்கள் உதவின என்றும் அதேபோல், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், இராணுவம் போன்ற துறைகளில் அந்நாடுகளுடன் இந்தியா கொண்டிருக்கு உறவு மேம்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

பிரதமரின் சுற்றுப்பயணங்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கும் பங்களிப்பு செய்துள்ளது என்றும் பருவநிலை மாற்றம், சர்வதேச குற்றங்கள் மற்றும் பயங்கரவாதம், உள்ளிட்ட பன்னாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இந்தியாவின் பங்களிப்பு அதிகரித்திருப்பதாக முரளிதரன் கூறினார்.

மோடி அரசின் வெளியுறவுத்துறை கொள்கையானது இந்தியாவை முதன்மைபடுத்துவதற்கு மாறாக தன்னை முதன்மைபடுத்துவதற்கே பயன்பட்டுள்ளது என்று தி பிரிண்ட் இணையத்தளம் விமரசனம் செய்துள்ளது.

தன்னை முதன்மைப்படுத்தும் இந்த வெளியுறவு கொள்கையினால், தென்னாசியாவில் பெருகிவரும் சீனாவின் ஆதிக்கத்திடம் இந்தியா தனது இடத்தை இழந்துள்ளது என்றும் தி பிரிண்ட் இணையத்தளம் கூறுகிறது.

மோடி மேற்கொண்ட இத்தனை சுற்றுப்பயணங்களுக்கு பிறகும் எந்த குறிப்பிடத்தகுந்த விளைவுகளும் ஏற்படவில்லை என்று தி பிசினஸ் லைன் நாளேடு கருத்து தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்