Aran Sei

’மத்திய அரசிடமிருந்து ஜிஎஸ்டி நிலுவை தொகை பெறுவதில் பிரச்சினை இல்லை’ – அமைச்சர் ஜெயக்குமார்

த்திய அரசிடம் இருந்து ஜிஎஸ்டி நிலுவைத் தொகை பெறுவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் ஐஜிஎஸ்டி தொகை நமக்கு வந்துவிட்டது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரி வசூல் நடைமுறைக்கு வந்ததில் இருந்து அதிகபட்ச வரி வசூல் என்பது கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.1.13 லட்சம் கோடியாக இருந்தது.

ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு : பொருளாதார மறுமலர்ச்சியல்ல – பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்

அதன்பிறகு, இந்த அளவு வரிவசூலைத் எப்போதும் தொட்டதில்லை. ஆனால், கடந்த டிசம்பர் மாதம் இதுவரை இல்லாத வகையில் ரூ.1.15 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தைவிடத் தற்போது 12 சதவீதம் கூடுதல் வரி வசூல் ஆகியுள்ளது. இதன் மூலம் தொடர்ச்சியாகக் கடந்த 3 மாதமாக ஒரு லட்சம் கோடிக்கு மேல் வரி வசூலாகியுள்ளது. 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரூ.1.05 லட்சம் கோடி, நவம்பர் மாதத்தில் ரூ.1.04 லட்சம் கோடி வசூலித்த நிலையில், டிசம்பர் மாதத்தில் ரூ.1.15 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.

அக்டோபர் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ 1 லட்சம் கோடியை தாண்டியது – அதிகரிப்பு நீடிக்குமா?

மத்திய ஜிஎஸ்டி வரி ரூ.21,365 கோடியாகவும, மாநில ஜிஎஸ்டி வரி ரூ.27,804 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி  வரி ரூ.57,426 கோடியாகவும், செஸ்வரி ரூ.8,579 கோடியாகவும் இருக்கிறது.

வசூலின் அதிகரிப்பிற்கு பண்டிகைக்கால தேவை, விற்பனை, பொருளாதாரம் இயல்புநிலைக்கு திரும்பிவருவது போன்ற பல கரணங்கள் கூறப்படுகின்றன. அதே நேரம், மத்திய அரசு,மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய தொகை ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் நிலுவை வைத்துள்ளது.

இழப்பீடு குளறுபடியில் ஜிஎஸ்டி கவுன்சில் – கூட்டாட்சி தத்துவத்துக்கு பின்னடைவு

இந்நிலையில், மத்திய அரசிடம் தமிழகத்துக்கான நிலுவைத் தொகைகளை கேட்டுப் பெறுவது குறித்து, மீன்வளத்துறை அமைச்சர் கூறியபோது, “ஜிஎஸ்டியை அமல்படுத்தியதால் மாநில அரசுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.8 ஆயிரம் கோடி வழங்கப்பட வேண்டும். இதைகேட்டபோது, நீங்கள் கடன்வாங்கிக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்தது.” என்று தி இந்து தெரிவித்துள்ளது.

’நீங்களே எங்களுக்கு கடன் வாங்கிக்கொடுத்து, கடன் தொகை மற்றும் வட்டியை நீங்களே செலுத்துங்கள்.’ என்று நாங்கள் கூறியபோது, அதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது என்று குறிபிட்டுள்ளார்.

ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு: எப்படி புரிந்து கொள்ளலாம்?

மேலும், “நிலுவைத் தொகை பெறுவதில் எந்த பிரச்சினையும் இல்லை. அதில் எந்த பாதிப்பும் இல்லை. ஐஜிஎஸ்டி தொகையும் நமக்கு வந்துவிட்டது.” என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்