Aran Sei

மத்திய அரசின் பட்ஜட்: இந்திய மக்களுக்கு சொல்லும் சேதி என்ன?

ந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 112 வது பிரிவின் கீழ், ஒவ்வொரு நிதியாண்டிற்கும் நிதி வருவாய்களும், செலவினங்களும் தொடர்பான மதிப்பீட்டை மத்திய அரசு நாடாளுமன்றத்தின் முன் வைக்க வேண்டும்.

இந்த ஆவணம் ஏப்ரல் 1 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரையிலான நிதியாண்டில் அரசின் வருவாய்கள், செலவினங்கள் ஆகியவற்றின் மதிப்பீடாகும்.

பிஎம் கேர்ஸ், தனியார் நிறுவனமா? – தொடரும் குழப்பமும் மறைக்கப்படும் உண்மைகளும்

இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசி வருகிறார். இவ்வாண்டு பட்ஜட்டின் முக்கிய அம்சங்கள்.

பொதுத்துறை வங்கி, காப்பீட்டு நிறுவன பங்குகள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

IDBI வங்கியுடன் சேர்த்து, இந்த ஆண்டு மேலும் 2 பொதுத்துறை வங்கிகள் மற்றும் 1 பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படும்.

காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49% லிருந்து 74% ஆக உயர்த்த, காப்பீட்டு சட்டத்தில் திருத்தம் கொண்ட வர முடிவு. காப்பீட்டு நிறுவனத்தை வெளிநாட்டை சேர்ந்தவர்கள் நிர்வகிக்க அனுமதிக்க முடிவு செய்யப்படும்.

‘தனியார் டிவிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற பாஜக’ – கே எஸ் அழகிரி கண்டனம்

7 துறைமுகங்கள் அரசு தனியார் ஒத்துழைப்புடன் (Public Private Participation) மேம்படுத்தப்படும்.

மக்கள் தேர்ந்தெடுக்கும் வகையில், ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சாரம் வழங்கும் நிறுவனங்கள் இருப்பது உறுதி செய்யப்படும்.

நகர்புறங்களில் பேருந்து போக்குவரத்தை மேம்படுத்த, அரசு தனியார் ஒத்துழைப்புடன் (Public Private Participation), 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும்.

அதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை – பூவுலகின் நண்பர்கள்

(சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள) கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் தேசிய நெடுஞ் சாலைகளை மேம்படுத்தப்படும்.

விளையாட்டு மைதானங்களைத் தனியாருக்க வழங்கப்படுவதன் மூலம் நிதி திரட்டப்படும்.

20 ஆண்டுகள் பழமையான தனி நபர் வாகனங்களையும், 20 ஆண்டுகள் பழமையான வணிகரீதியான வாகனங்களின் பயன்பாட்டையும் நிறுத்தத் திட்டத்தையும் மத்திய அரசு தனது நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களில் தனியாருக்கு அதிக உரிமை அளிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. சென்னை அருகே திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளியில் அமைந்திருக்கும் அதானியின் துறைமுக விவாக்கத்தால் சென்னையில் பேரிழப்பு நேரும் என்று மக்களும் சூழலியலாளர்களும் அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தியது நினைவுகூரத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்