Aran Sei

“மக்களின் தீபாவளி மத்திய அரசின் கைகளில்” – உச்ச நீதிமன்றம்

Credits The Indian Express

உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மத்திய அரசு வட்டி மீதான வட்டிக்கு தள்ளுபடி வழங்கி அறிவித்துள்ளது.

2 கோடி ரூபாய்க்கும் குறைவான தொகை கடனாகப் பெற்றவர்களுக்கு ஆறு மாதங்கள் வட்டிக்கு வட்டி தள்ளுபடி வழங்கும் நிவாரணத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிவாரணத் திட்டத்தினால், 2020-ம் ஆண்டின் மார்ச் 1 முதல் 6 மாதங்களுக்கு இரண்டு கோடி ரூபாய் வரையிலான சிறு கடன் தொகைகளுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

கல்வி கடன், எம்எஸ்எம் கடன், வீட்டுக் கடன், நுகர்வோர் நீடித்த கடன், கிரெடிட் கார்டு பாக்கிகள், ஆட்டோமொபைல் கடன், தொழில் வல்லுநர்களுக்கான தனிநபர் கடன் மற்றும் நுகர்வு கடன் ஆகிய பிரிவுகளுக்கு இந்த கடன் நிவாரணம் பொருந்தும் என புதன்கிழமை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளுக்கான கடன்களுக்கு இந்த நிவாரணம் கோர தகுதி இல்லை என்று நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

நவம்பர் 5-ம் தேதி வரை, கடன் வாங்கியவர்களின் கூட்டு வட்டி மற்றும் தனி வட்டிக்கு இடையிலான வேறுபாட்டுத் தொகை திருப்பி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 29-ம் தேதி வரையிலான கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையின் அடிப்படையில் கடன் வாங்கியவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் எனவும் கூறப்பட்டள்ளது.

2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்யும் திட்டம் நவம்பர் 5-ம் தேதிக்குள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்து கடன் வழங்கும் நிறுவனங்களையும் ரிசர்வ் வங்கி கோரியுள்ளது.

இந்த வட்டி நிவாரணத் திட்டம் குறித்து, ”மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடுவது மத்திய அரசின் கைகளில் இருக்கிறது.” என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்