Aran Sei

‘கொரோனா கால மீட்பு நிதியில் திருப்தியில்லை’ – பிரிக்வர்க் ரேட்டிங்ஸ்

Image Credits: DC

கொரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட ஆறு மாத கால பொருளாதார அழுத்தத்திற்குப் பிறகு, சில முக்கியமான பொருளாதார நடவடிக்கை குறியீடுகள் பொருளாதார மீட்சியை நோக்கிச் செல்கின்றன. ஆனால் இந்த மறுமலர்ச்சி பலவீனமாக இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன என்று பணவோட்ட மதிப்பீட்டு நிறுவனமான பிரிக்வர்க் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.

இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) பொருளாதாரம் 13.5% சுருங்கக்கூடும் என்றும், பொருளாதாரத்தை புதுப்பிக்க அரசாங்கம் உடனடி முன்முயற்சி எடுக்காவிட்டால், 2021 நிதியாண்டில் சுருக்கம் சுமார் 9.5% ஆக இருக்கும் என்றும் அந்நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

கொரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட ஆறு மாத கால பொருளாதார அழுத்தத்திற்குப் பிறகு, இறுதியாகப் பொருளாதாரத்தில் சில நல்ல செய்திகள் உள்ளன,” என்று பிரிக்வர்க் ரேட்டிங்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.

உற்பத்தி பிஎம்ஐ (வாங்குதல் குறியீடு – Purchasing Managers’ Index) ஆகஸ்டில் 52-ல் இருந்து செப்டம்பர் மாதத்தில் 56.8 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த எட்டு ஆண்டுகளில் மிகவும் அதிகம்.

செப்டம்பர் மாத  ஜிஎஸ்டி வசூல் (ரூ.95,480 கோடி) கடந்த ஆண்டை விட 3.8% அதிகரித்துள்ளது.  ஆகஸ்ட் மாத வசூலை விட 10% அதிகரித்துள்ளது. பயணிகள் வாகன விற்பனை 31% அதிகரித்துள்ளது மேலும்  ரயில்வே சரக்கு போக்குவரத்து 15% உயர்ந்துள்ளது.

ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு, விற்பனை ஏற்றுமதி 5.3% வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. இது பொறியியல் பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள், மருந்துகள் மற்றும் ஆயத்த ஆடைகள் ஆகியவற்றின் ஏற்றுமதி மூலம் நடைபெற்றுள்ளது. மின் தேவை மற்றும் உற்பத்தியிலும் அதிகரிப்பு உள்ளது.

இருப்பினும், இந்த மீட்சி பலவீனமாக இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன. புதிய திட்டங்களுக்கான மூலதன செலவு இரண்டாவது காலாண்டில் 81% குறைந்துள்ளது.இது தொடர்ச்சியாக முதலீடுகள் குறைந்து வரும் போக்கைக் காட்டுகிறது. நாட்டின் பிரதான துறைகளில் ஆகஸ்ட் மாதம் 8.5% பொருளாதார சுருக்கம் ஏற்பட்டுள்ளது,” என்றும் அந்நிறுவனம்  தெரிவித்துள்ளது.

“அரசாங்கம் கவனிக்க வேண்டிய உடனடி பணி, விநியோகச் சங்கிலி சீர்குலைவுகளை அகற்றுதல் மற்றும் பொருளாதார சரிவிலிருந்து உயர்த்துவதற்காக ஒட்டுமொத்த உற்பத்தியை அதிகரிப்பதாகும்” என்று பிரிக்வர்க் ரேட்டிங்ஸ் கூறியுள்ளது.

இதுவரை அறிவிக்கப்பட்ட கொரோனா கால மீட்பு நிதி கணிசமான நிதித் தொகுப்பைக் கொண்டிருக்கவில்லை என்றும் இந்நிறுவனம் கூறியுள்ளது.

“இதற்காகப் பொது செலவினங்களை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தொடங்க வேண்டும்” என்றும் “அரசு நிதி இலக்குகளில் பிடிவாதத்தை குறைக்க வேண்டும்,” என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்