Aran Sei

`மோடி, இந்தியாவை பலகீனமாக்கி உள்ளார்’ – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Credits The Print

பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்திய நாட்டின் பொருளாதாரம் மந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 23.9% சரிவு ஏற்பட்டது.

2020-2021 நிதியாண்டின் மூன்று மற்றும் நான்காம் காலாண்டில் பொருளாதாரம் மீளத் தொடங்கும் என்றாலும் வளர்ச்சி இருக்காது என்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் கணித்திருந்தது.

தொடர்ந்து, ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில் ஜிடிபி 8.6% வரை வீழ்ச்சியடையும் என்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

இந்தச் செய்தியை ட்விட்டரில் பகிர்ந்த ராகுல் காந்தி, “வரலாற்றில் முதல்முறையாக இந்திய நாட்டின் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் செயல்களால் நாட்டின் பலத்தைக் கூட பலகீனமாக மாற்றியுள்ளார்.” என்று கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளார்.

 

தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளுக்கு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி அடைந்தால் அது ‘டெக்னிக்கல் ரிசஸன்’ (பொருளாதாரத்தில் மந்த நிலை) என்று கொள்ளப்படுகிறது.

இந்த இரண்டாவது காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து மத்திய அரசு நவம்பர் 27-ம் தேதி அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட உள்ள நிலையில், பல பொருளாதார ஆராய்ச்சி நிறுவனங்கள் வளர்ச்சி வீதம் குறித்த கணிப்பை வெளியிட்டுள்ளதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தில் இதுபோன்ற பொருளாதார மந்தநிலை ஏற்படுவது இதுவே முதல்முறை என்று ராகுல் காந்தி சுட்டிக் காட்டியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்