Aran Sei

பின் தங்கிய மக்களுக்கு பாதுகாப்பு – உலக வங்கியிடம் கடன் வாங்கிய இந்தியா

கொரோனா நோய்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் பின் தங்கிய மக்களுக்கு உதவ, உலக வங்கியுடன் இந்தியா, 400 மில்லியன் டாலர் ஒப்பந்தம் செய்துள்ளது. 

இந்த ஒப்பந்தம் இரண்டு கட்டங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2020 மே மாதத்தில், இத்திட்டத்தின் முதல் பாகம் நிறைவேற்றப்பட்ட போது உலக வங்கி 750 மில்லியன் டாலர் கடனுதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கடன் உதவி உலக வங்கியின் கிளையான சர்வதேச வளர்ச்சி கழகத்தால் இந்தியாவிற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.  

கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட, பின் தங்கிய மக்களுக்கு, போதுமான சமூக பாதுகாப்பு அளிக்க இத்திட்டம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அரசின் சார்பாக மத்திய பொருளாதார துறையின் துணை செயலாளர் சி.எஸ்.மொஹபத்ராவும், உலக வங்கியின் சார்பாக உலக வங்கியின் இந்திய இயக்குநர் சுமிலா கல்யாணியும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். 

“அவசர நிவாரண உதவிக்காக ஏற்கனவே இருக்கும் அரசின் திட்டங்களை விரிவு செய்வது தான் இத்திட்டத்தின் முதல் கட்டத்தில் நடந்தது. இந்திய அரசின் வழிநடத்தலில் இது நடந்தது. இரண்டாவது கட்டத்தில், அரசின் நிவாரண திட்டங்களை விரிவு செய்வது தொடரும். பின் தங்கிய வீடுகளுக்கும், நகரங்களில் இருக்கும் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், அமைப்புசாரா தொழில் துறைகளில் இருப்பவர்களுக்கும் உணவு மற்றும் பண உதவி கிடைப்பது உறுதி செய்யப்படும்” என நிதி அமைச்சகம் இந்த ஒப்பந்தம் குறித்து தெரிவித்துள்ளது. 

கொரோனா நோய்தொற்று மற்றும் எதிர்கால பேரிடர்களுக்கு முறையான நிவாரணங்கள், சமூக பாதுகாப்பு அளிக்க, பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தேவையான நிதியை மாநில அரசுகள் பெற்றுக் கொள்ள இந்த திட்டங்கள் உதவும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது

இத்திட்டம் ஆசிய வளர்ச்சி வங்கி [Asian Development Bank (ஏ.டி.பி.)], ஏஜென்ஸ் ஃப்ரான்காய்ஸ் டி டெவலெப்மெண்ட [Agence Francaise de Developpement (ஏ.எஃப்.டி)] மற்றும் க்ரெடிடன்ஸ்டால்ட் ஃபு விதாரஃப்பா (Kreditanstalt für Wiederaufbau)எனும் ஜெர்மானிய நிறுவனத்தின் கூட்டு முயற்சியாகும். 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்