Aran Sei

தொழில்துறை உற்பத்தி: மீட்சி எப்போது?

credit: hurriyetdailynews.com

ட்டு முக்கியமான உட்கட்டமைப்பு துறைகளின் வளர்ச்சி 8.5 விழுக்காடு அளவுக்கு வீழ்ச்சியடைந்திருப்பதாக நேற்று (செப்டம்பர் 30) புள்ளியல் துறை வெளியிட்டுள்ள தொழில்துறை உற்பத்தி குறியீட்டு (IIP) அறிக்கை கூறுகிறது.

தொழில்துறை உற்பத்தி குறியீடு என்பது பொருளாதாரத்தில் உள்ள பல்வேறு துறைகளில் நடக்கும் உற்பத்தியை கணக்கிடுவதற்கான குறியீடாகும். ஒவ்வொரு துறையிலும் மாதா மாதம் எவ்வளவு உற்பத்தி நடைபெறுகிறது என்பதை இந்த குறியீடு வெளிப்படுத்தும். இதை புள்ளியல் துறையின் கீழ் இயங்கக்கூடிய மத்திய புள்ளியல் அமைப்பு வெளியிடுகிறது.

நிலக்கரி, உரம், மின்சாரம்,ஸ்டீல்,சிமெண்ட், சுத்திகரிப்பு செய்யப்பட்ட பொருட்கள், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் ஆகிய எட்டு முக்கியமான துறைகளை தொழில்துறை உற்பத்தி குறியீடு அளவிடுகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் நிலக்கரி மற்றும் உரம் ஆகிய துறைகளை தவிர கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு செய்யப்பட்ட பொருட்கள், ஸ்டீல்,சிமெண்ட், மின்சாரம் ஆகிய துறைகளின் வளர்ச்சி பூஜியத்துக்கு கீழே பதிவாகியுள்ளது.

நடப்பு ஆண்டின் ஏப்ரல்-ஆகஸ்ட் மாதத்துக்கிடையில் தொழில்துறை உற்பத்தி 17.8 விழுக்காடு அளவுக்கு வீழ்ந்துள்ளது. சென்ற ஆண்டு ஏப்ரல்-ஆகஸ்ட் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 2.5 விழுக்காடாக இருந்தது.

ஆகஸ்ட் மாதத்தில் ஸ்டீல் உற்பத்தி 6.3 விழுக்காடு, சிமெண்ட் உற்பத்தி 19.1 விழுக்காடு அளவுக்கு இயற்கை எரிவாயு 14.6 விழுக்காடு அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

நிலக்கரி 3.6 விழுக்காடு அளவுக்கும் உரம் துறைகளின் உற்பத்தி 7.3 விழுக்காடு அளவுக்கும் வளர்ச்சியை கண்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் தொழில்துறை உற்பத்தி குறியீட்டில் உள்ள சுருக்கம் மெது மெதுவாக வளர்ச்சியை நோக்கி திரும்பும் என்று ஐசிஆர்ஏ-வின் தலைமை பொருளியளாளர் அதிதி நாயர் கருத்து தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்