Aran Sei

அனில் அம்பானிக்கு ரூ.4,600 கோடி இழப்பீடு வழங்கி தீர்ப்பு – பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவாரா?

Credits : The Indian Express

கடந்த 2008 ஆம் ஆண்டு, ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடட் நிறுவனத்தின் கீழ் செயல்படும், டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் பிரைவட் லிமிடட் (டிஏஎம்இபிஎல்) நிறுவனம், டெல்லி மெட்ரோ கழகத்துடன் (டிஎம்ஆர்சி) இணைந்து 22.7 கி.மீ நீளமுள்ள டெல்லி விமான நிலைய மெட்ரோ சேவை கட்டுமானத்திற்கான ஒப்பந்தத்தை செய்தது. இது தான், தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட முதல் ரயில்வே ஒப்பந்தமாகும். இதன்படி டெல்லி மாநகரத்தின் விமான நிலைய மெட்ரோ ரயில் சேவைக்கான பணியை ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்கியது.

இவ்விரண்டு நிறுவனத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 2008 முதல் 2038 வரை போடப்பட்ட ஒப்பந்தம், 2012 ஆம் ஆண்டே முடிவுக்கு வந்தது. டிஎம்ஆர்சி ஒப்பந்தத்தின் விதிகளை மீறி செயல்பட்டதாக குற்றம் சாட்டிய ரிலையன்ஸ் நிறுவனம், இழப்பீடு கோரி தீர்ப்பாயத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், கடந்த 2017 ஆம் ஆண்டு, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு, டெல்லி மெட்ரோ கழகம் 4,600 கோடி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, டிஎம்ஆர்சி டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தீர்ப்பாயத்தின் உத்தரவு செல்லும் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து கடந்த 2019 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் டிஎம்ஆர்சி செய்த மேல்முறையிட்டில், ”தீர்ப்பாயம் விதித்துள்ள இழப்பீடு தொகையை செலுத்த தேவையில்லை” என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உலக பணக்காரர்களில் 8வது இடத்தில் அம்பானி – கொரோனா காலத்தில் மட்டும் 24% வளர்ச்சி

இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ரிலையன்ஸ் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 2017 ஆம் ஆண்டு, தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவு செல்லும் என உத்தரவிட்டுள்ளனர். இதன் மூலம் டெல்லி மெட்ரோ கழகம், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.4,600 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.

ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் – ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியல்

இதனிடையே, எஸ்பிஐ உட்பட சில பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து கடனை பெற்று திருப்பி செலுத்தாமல் இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம், டெல்லி மெட்ரோவுக்கு எதிரான வழக்கில் பெற்ற வெற்றியின் மூலம் கிடைக்கும் இந்த தொகையினை பொதுத்துறை வங்கிகளுக்கு திரும்ப செலுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அம்பானிக்கு 10,000 கோடி கடன் தள்ளுபடி? – திவால் சட்டத்தின்படி கடன் தள்ளுபடி பெற முயற்சி

இந்நிலையில், திவால் சட்டத்தின் மூலம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நேவல் அண்ட் இன்ஜினியரிங் நிறுவனத்துக்கு, ரூ.10,000 கோடி வரை கடன் தள்ளுபடி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்