Aran Sei

ஹார்லே டேவிட்சன் வெளியேற்றம்: காரணம் என்ன?

credit: en.wikipedia.com

யர் விலை இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் ஹார்லே டேவிட்சன் நிறுவனம், இந்தியாவில் உள்ள உற்பத்தி ஆலையையும் விற்பனை நிலையங்களையும் மூடவிருப்பதாக அறிவித்திருக்கிறது.

ஹார்லே டேவிட்சன் நிறுவனம் 2020-ம் ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாதத்துக்கு இடையில் $9.60 கோடி அளவுக்கு இழப்புகளை சந்தித்துள்ளது. இதை ஈடுகட்ட அந்நிறுவனம் உலகளாவிய அதன் வணிக நடவடிக்கைகளை மறூசீரமைக்க ‘ரீவையர்’ என்ற பெயரில் ஒரு உத்தியை வடிவமைத்ததுள்ளது.

அதன்படி, வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சில ஆசிய நாடுகளில் அந்நிறுவனம் மிக அதிக லாபம் ஈட்டி வருகிறது. அந்த நாடுகளின் தனது செயல்திறனை மேம்படுத்துவதற்கும் தொடர்ந்து லாபங்களை தக்கவைப்பதற்கும் தனித்தனியாக இருக்கின்ற உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

சில காலமாகவே நிதி நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் ஹார்லே டேவிட்சன் நிறுவனம் அதை சமாளிப்பதற்கு இந்தியா போன்ற அதிகம் லாபம் ஈட்டாத நாடுகளிலிருந்து வெளியேற உள்ளது.

credit: newsbytesapp.com
credit: newsbytesapp.com

ஹரியானா மாநிலத்தின் பவால் நகரத்தில் உள்ள உற்பத்தி நிலையத்தை மூட திட்டமிட்டிருப்பதாகவும் குர்கானில் உள்ள விற்பனை நிலையத்தின் அளவையும் கணிசமாக குறைக்கவிருப்பதாகவும் ஹார்லே டேவிட்சன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் இந்திய வாடிக்கையாளர்களுடன் நிறுவனம் தொடர்பை பராமரிக்கும் என்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் அவர்களுக்கு தெரியப்படுத்தும் என்றும் அது கூறியுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ஹார்லே டேவிட்சனின் முகமை வலைப்பின்னல் தொடர்ந்து ஒப்பந்த அடிப்படையில் சேவை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

credit: timesnownews.com
credit: timesnownews.com

மார்ச் 2020-ம் ஆண்டு முடிவில் இந்தியாவில் மொத்தம் 1 கோடியே 70 லட்சம் இருசக்கர வாகணங்கள் விற்பனையாகியுள்ளன. உலகத்தில் இருசக்கர வாகனங்களுக்கான மிகப்பெரிய சந்தையாக உள்ள இந்தியாவில் சென்ற ஆண்டில் ஹார்லே டேவிட்சன் நிறுவனம் வெறும் 2,500 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

இந்தியாவை விட்டு வெளியேறும் இந்த முடிவானது, சீனாவிலிருந்து வெளியேறும் முதலீடுகளை ஈர்க்க மத்திய அரசு செய்துகொண்டிருக்கும் முயற்சிகளை பலவீனப்படுத்துகிறது என்று தி இந்து நாளேடு குறிப்பிடுகிறது.

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொடர்ந்து இந்தியாவை விட்டு வெளியேறுவது நிகழ்ந்த வண்ணமுள்ளது. ஜெனரல் மோட்டார்சும் இந்தியாவில் 2017-ம் ஆண்டுடன் தனது விற்பனையை நிறுத்தி விட்டது. இந்தியாவில் உற்பத்தி செய்து அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறுத்தவிருப்பதாகவும் அறிவித்துள்ளது.

ஃபோர்ட் மோட்டர் நிறுவனமானது இந்தியாவில் தனித்து இயங்கக்கூடிய தனது முடிவை மறுபரிசீலனை செய்து சென்ற ஆண்டு மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்துடன் கூட்டு முறையில் இந்தியாவில் தனது செயல்பாடுகளை அமைத்துக்கொண்டது.

இந்தியாவை விட்டு வாகன நிறுவனங்கள் வெளியேறுவதற்குக் காரணமாக, “முதலீட்டுக்காக போட்டியிடும் மற்ற வளரும் நாடுகளைக் காட்டிலும் இந்தியா ஏழ்மையாக உள்ளது. இந்தியச் சந்தையானது ஆட்டோ மொபைல் நிறுவனங்களுக்கு உகந்ததாக இல்லை” என்று தி இந்து நாளேடு கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்