Aran Sei

ஜிஎஸ்டி இழப்பீடு: தணிக்கை அமைப்பு கூறுவதென்ன?

credit: rediff.com

த்திய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்தியிருப்பதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தணிக்கை அறிக்கையில் (சிஏஜி)  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை வழங்க நிதி இல்லை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 41-வது ஜிஎஸ்டி கவுசில் கூட்டத்தில் தெரிவித்தார்.

மாநிலங்கள் இழப்பீடாக பெற வேண்டிய நிதியை ரிசர்வ் வங்கி வழியாக கடனாக வாங்கிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இந்த திட்டத்தை கேரளா, தெலங்கானா, மேற்கு வங்கம், பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்கள் எதிர்த்தன.

ஜிஎஸ்டி இழப்பீடு தொகை வழங்வது பற்றி சென்ற வாரம் நாடாளுமனறத்தில் பேசிய நிதி அமைச்சர், மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை மத்திய தொகுப்பு நிதியிலிருந்து (Consolidated Fund of India) வழங்குவதற்கு எந்த வழிவகைகளும் இல்லை என்று கூறினார். இது இந்தியாவின் தலைமை வழக்குறைஞர் வழங்கிய கருத்து என்றும் நிர்மலா சீத்தாராமன் கூறினார்.

சென்ற புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில், மத்திய அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை காட்டிலும் குறைவாக வழங்கயுள்ளது என்பது தெரிய வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 47,272 இழப்பீடு தொகையை வழங்கவில்லை என்று சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது.

மத்திய அரசு முழுமையாக இழப்பீடுகளை வழங்காமல் தவிர்த்தது என்பதை சிஏஜி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பொதுவாக, ஜிஎஸ்டி கூடுதல் வரியானது இந்திய தொகுப்பு நிதியில் செலுத்தப்படும். அந்த கணக்கிலிருந்து இந்திய பொது கணக்கில் இழப்பீடு நிதி என்ற தலைப்பில் உள்ள தொகுப்புக்கு மாற்றப்படும். அந்த தொகுப்பிலிருந்து மாநிலங்களுக்கு இரு மாதங்களுக்கு ஒருமுறை ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படும்.

மத்திய அரசு இந்திய தொகுப்பு நிதியிலிருந்து பொது கணக்குக்கு நிதியை மாற்றுவதற்கு மாறாக, தொகுப்பு நிதியிலேயே இழப்பீடு தொகையை தக்கவைத்துக்கொண்டது சிஏஜி அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக 2017-18 மற்றும் 2018-19-ம் ஆண்டில் வருவாயை அதிகப்படுத்தியும் நிதி பற்றாகுறையை குறைத்தும் மத்திய அரசு மதிப்பீடு செய்துள்ளது என சிஏஜி கூறியுள்ளது.

மத்திய அரசு 2018-ம் ஆண்டில் மொத்தம் ரூ.95,081 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டு வரியாக வசூல் செய்தது. ஆனால் மாநிலங்களுக்கு ரூ.54275 கோடி மட்டுமே பிரித்து வழங்கியது என்று அறிக்கை கூறியுள்ளது.

ஜிஎஸ்டி தொகையை பொது கணக்குக்கு மாற்றாதது போலவே, உட்கட்டமைப்பு, கச்சா எண்ணெய், தேசிய கனிம அறக்கட்டளை போன்றவற்றில் விதிக்கப்படும் கூடுதல் வரியையும் பொது கணக்குக்கு மத்திய அரசு மாற்றவில்லை என்று சிஏஜி கூறியுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை, நிதி பற்றாக்குறை குறைவாக உள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் வரி என்பது, ஒரு குறிப்பிட்ட செயலை நிறைவேற்றுவதற்கு தேவையான நிதியை திரட்டுவதற்கு நிதி அமைச்சகம் விதிக்கும் வரியாகும். ஆனால், அந்த நிதியை மத்திய அரசு அக்குறித்த காரணங்களுக்கு செலவு செய்யவில்லை என்றும் மாறாக வேறு காரணங்களுக்கு செலவிட்டுள்ளது என்றும் சிஏஜி தெரிவித்துள்ளது.

மாநிலங்களுக்கு முழு இழப்பீடு தொகையையும் வழங்காதது ஜிஎஸ்டி இழப்பீடு வரி சட்டம் 2017-க்கு எதிரானது என்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய தணிக்கைதுறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்