Aran Sei

மத்திய அரசின் ஜிஎஸ்டி முறைகேடு: சிஏஜி குற்றச்சாட்டு

credit: thehindubusinessline.com

ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை குறைத்து மதிப்பீடு செய்ததற்காக மத்திய அரசின் கணக்கு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை தணிக்கை துறை (சிஏஜி) கூறியுள்ளது.

சென்ற புதன்கிழமை (செப்டம்பர் 23) நாடாளுமன்றத்தில் சிஏஜி தாக்கல் செய்த அறிக்கையில், மத்திய அரசு 2017-18 மற்றும் 2018-19-ம் ஆண்டுகளில் மாநிலங்களுக்கு ரூ.47,272 கோடி குறைவாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி இழப்பீடு நிதி தொகுப்புக்கு செலுத்த வேண்டிய தொகையை வருமான அல்லாத பற்றுகளாக (non-tax receipts) மாற்றி கணக்கிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசின் நிதி பற்றாகுறை குறைவாக கண்பிக்கப்பட்டது.

அதேபோல், பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் கூடுதல் வரி மத்திய சாலை மற்றும் உட்கட்டமைப்பு நிதி தொகுப்பில் (CRIF) செலுத்தப்பட வேண்டும். 2018-19-ம் ஆண்டில் மட்டும் ரூ.10,250 கோடி கூடுதல் வரி ஈட்டப்பட்டது. அந்த நிதியை சிஆர்ஐஃப் தொக்குப்பில் செலுத்துவதற்கு மாறாக, வருமானம் அல்லாத பற்றுகளாக கணக்கிடப்பட்டுள்ளது என்று சிஏஜி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை வேறு திட்டங்களுக்கு “திருப்பி விடவில்லை” என்று மத்திய நிதி அமைச்சகம் சென்ற சனிக்கிழமை சிஏஜி-யின் அறிக்கைக்கு பதிலளித்துள்ளது. 2017-18 மற்றும் 2018-19 ஆகிய ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை முழுமையாக வழங்கப்பட்டுள்ளது என்றும் நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

மத்திய சாலை மற்றும் உட்கட்டமைப்பு நிதி தொகுப்பில் உள்ள பயன்படுத்தபடாத நிதியை மத்திய நிதி தொகுப்புக்கு மாற்றுவதற்கு நிதி அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார். பயன்படுத்தபடாத நிதிகளை மத்திய நிதி தொகுப்புக்கு மாற்றுவது என்பது நடைமுறையில் உள்ள வழக்கம்தான் என்றும் நிதி அமைச்சம் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி இழப்பீட்டை முழுமையாக மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற நிதி அமைச்சகத்தின் கூற்று ஏற்றுக்கொள்ள முடியாது என்று சிஏஜி மறுப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் நிதி பற்றாகுறையின் அளவை குறைத்து மதிப்பிடுவதற்காக குறிப்பிட்ட நோக்கங்களுக்காக வசூல் செய்யப்படுகிற கூடுதல் வரிகளை வருமானம் அல்லாத பற்றுகளாக கணக்கிடப்பட்டுள்ளது என்று சிஏஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுபோல், மாற்றி கணக்கிடப்படுவது கணக்கு விதிமுறைகளை மீறும் செயல் என்பது மட்டுமல்லா நாடாளுமன்றத்தின் நோக்கங்களுக்கு இது எதிரானது என்றும் சிஏஜி கூறிப்பிட்டுள்ளது.

மத்திய சாலை மற்றும் உட்கட்டமைப்பு நிதி தொகுப்பு என்பது செயலற்ற தொகுப்பு கிடையாது என்று நிதி அமைச்சகத்துக்கு தலைமை தணிக்கை துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்