Aran Sei

டாடா நிறுவனத்திற்கு அரசின் பங்குகளை விற்க மத்தியஅரசு முடிவு – 16.12% பங்குகள் விற்பனை

டாடா தொலைத்தொடர்பு துறையில் உள்ள தனது மொத்தப் பங்குகளையும் விற்பனைக்குச் சலுகை(offer for sale) முறையில் விற்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் மீதமுள்ள பங்குகளை பனடோன் நிறுவனத்திற்கு விற்கவுள்ளதாகவும் தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது அரசுக்கு டாடா தொலைத்தொடர்பு துறையில் 26.12 % பங்குகளும் , பனடோன் நிறுவனத்தில் 34.8% பங்குகளும் , டாடா சன்ஸ் நிறுவனத்தில் 14.07% பங்குகளும் உள்ளன என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க பொருளாதாரத்திற்கு சட்டவிரோத குடியேறிகளின் பங்கு – இரண்டாம் இடத்தில் இந்தியர்கள்

டாடா தொலைத்தொடர்பு துறை, இந்திய குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு இடையிலான அரசின் பங்கு விற்பனை தொடர்பான திருத்த ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்தாகியுள்ளதாகவும் தி இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பங்குகளைச் சலுகை முறையில் விற்கப்படும் இந்தப் பங்குகள் போக மீதமுள்ள பங்குகளை பனடோன் நிறுவனத்திற்கு விற்க உள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தேசிய பங்குச் சந்தை – தரகர்களுக்கு ஆதாயம் அளித்த முன்னாள் தலைவர்கள் சித்ரா ராமகிருஷ்ணன், ரவி நரேன்

மத்திய அரசிற்கு டாடா தொலைத்தொடர்பு நிறுவனத்தில் 7,44,46,885 பங்குப் புள்ளிகள் உள்ளதாகவும் ஒரு பங்கின் விலை 1289.75 ரூபாயாக உள்ளதாகவும் ஆக மொத்தமாக 9,601 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் உள்ளதாகவும் தி இந்து செய்தி கூறுகிறது.

மத்திய அரசுச் சலுகை முறையில் விற்க இருக்கிற மொத்த பங்குகளில் சரிபாதி பங்குகள் பனடோன் நிறுவனத்திற்கு விற்க இருப்பதாகவும் , அந்தச் சரிபாதி பங்குகளின் மொத்த புள்ளிகள் விற்கப்படும் மொத்த பங்குகளின் விலையைப் பொறுத்து அமையும் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமேசான், ரிலையன்ஸ் மோதல் – ஃபியூச்சர் ரிடெய்ல் பங்குகளை விற்க தடை உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை

இதன்படி முதற்கட்டமாக 16.12% பங்குகள் விற்கப்பட இருக்கிறது. இது 4,59,46,885 புள்ளிகளைக் கொண்டது என்றும் தி இந்து செய்தி கூறுகிறது.

1986 ஆம் ஆண்டு மத்திய அரசு வி.எஸ்.என்.எல் நிறுவனத்தை உருவாக்கியது பின் 2002 அந்த நிறுவனத்தின் 25% பங்குகளையும் , அதன் நிர்வாகத்தையும் பனடோன் விற்றது பின் முதலீடுகளைத் திரும்பப் பெறப்பட்டு டாடா தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்