Aran Sei

கடன்களை வசூலிக்க வாராக்கடன் வங்கி – 30 ஆயிரம் கோடி செலவில் அமைக்க நிதி அமைச்சகம் திட்டம்

Credits : The Indian Express

ராக்கடன்களை வசூலிக்க பாஜக தொடர்ச்சியாக முயற்சி செய்து வருவாதகவும், கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் ரூ 5,01,479 கோடி வராக்கடனை மீட்டிருப்பதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை நிறுவனங்களிடம் கடன் பெறும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கடன்களை திருப்பி செலுத்த தவறுவதால் (வராக் கடன்) இந்திய வங்கித்துறை கடும் நெருக்கடிகயை சந்தித்துள்ளது. இந்த நெருக்கடிகளை சமாளிக்க, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வராக்கடன் வங்கி அல்லது தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் (என்ஏஆர்சிஎல்) தொடங்கப்படும் என 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையின் போது அறிவித்தார்.

வராக்கடன் வங்கி, தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகள் வசூலிக்க முடியாமல் உள்ள கடன்களில் ஒரு குறைந்தபட்ச தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் வசூலிப்பதற்காக உருவாக்கப்படும் பிரத்யேகமான நிறுவனமாகும். இந்த வங்கிகளில், வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுக்கவோ, கணக்கு தொடங்கி வைப்பு தொகை(Deposit) வைக்கவோ முடியாது.

கார்ப்பரேட்களின் கடனை வசூலிப்பதில் முனைப்பு காட்டுங்கள் எளிய மக்களிடம் அல்ல – பொதுத்துறை வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

இதன் மூலம், வராக்கடனால் வங்கிகள் சந்திக்கும் நெருக்கடிகளை குறைத்து, வங்கித்துறையை லாபத்தில் செயல்பட வைக்கலாம் என்றும் இது இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் ஆர்.பி.ஐ.யின் முன்னாள் கவர்னரும், பொருளாதார அறிஞருமான ரகுராம் ராஜன், வராக்கடன் வங்கி உருவாக்கப்பட்டால் பொதுத்துறை நிறுவனங்களால் வராக்கடன்களை வசூலிக்க முயற்சி கூட செய்ய முடியாது என்றும் இந்த திட்டத்தின் கீழ் பொதுத்துறை வங்கிக்கு வர வேண்டியது, வராக்கடன் வங்கியிடம் சென்றுவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

“வங்கிகளை தனியாருக்கு வழங்குவதே அரசின் கொள்கை” – நிதித்துறை செயலாளரின் கருத்துக்கு வங்கி ஊழியர்கள் சங்கம் கண்டனம்

இந்தச் சூழலில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி, செய்தியாளர்களைச் சந்தித்த ஒன்றிய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன், ”வராக்கடன் வங்கியை உருவாக்க ரூ.30,600 கோடி ஒதுக்கபட்டிருக்கிறது. இதற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது” என தெரிவித்துள்ளார்.வராக்கடன் வங்கியின் மூலம், பொதுத்துறை வங்கிகளிடம் இருக்கும் ரூ.2 லட்சம் கோடி வரையிலான வராக்கடன்கள் பெறப்படும் எனவும் இந்த தொகையில் 15% பணமாக மீட்கப்படும் எனவும் மீதமுள்ள 85% பாதுகாப்பு ரசீதுகளின் மூலமாக பெறப்படும் என தெரிவித்துள்ளார். வராக்கடன் வங்கியில், பொதுத்துறை வங்கிகள் 51% பங்குகளை வைத்திருக்கும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

கடந்த மூன்று நிதியாண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 4.90 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி – மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தகவல்

மேலும், ”இந்திய கடன் தீர்வு நிறுவனத்தை அமைக்க அரசு முயன்று வருவதாகவும் அந்நிறுவனத்தில் பொதுத்துறை நிறுவனங்களும், அரசுக்குச் சொந்தமான நிதி நிறுவனங்களும் இணைந்து 49% பங்குகளை வைத்திருக்கும்” எனவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அனில் அம்பானிக்கு ரூ.4,600 கோடி இழப்பீடு வழங்கி தீர்ப்பு – பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவாரா?

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கிகளின் சொத்து விவரங்கள் பற்றிய கூட்டத்தில், வங்கிகளில் பல ஆயிரம் கோடிகள் வராக்கடனாக இருந்ததாகவும், கடந்த ஆறு ஆண்டுகளில், அரசு ரூ 5,01, 479 கோடி வராக்கடனை மீட்டிருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்