‘எளிதாகத் தொழில் செய்யும்’ (Ease of Doing Business) திட்டத்திற்கான சீர்திருத்தங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தமிழகம், தெலுங்கானா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்குக் கூடுதலாக, ரூ.16,728 கோடி கடன் பெற அனுமதிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆந்திரா, கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் கூடுதல் கடன் தொகையைப் பெற அனுமதிக்கப்பட்டுள்ளன.
எளிதாகத் தொழில் செய்யும் திட்டத்தில் திருத்தங்களை கொண்டுவரும் மாநிலங்களுக்குக் கூடுதல் கடன் வழங்க மே மாதத்தில் மத்திய அரசு முடிவு செய்தது.
40 ஆண்டுகளில் முதன்முறையாக நுகர்வோர் செலவு சரிவு – வீழ்ச்சியில் பொருளாதாரம்
‘மாவட்ட அளவிலான வணிக சீர்திருத்த செயல் திட்டத்தின்’ முதல் பரிசீலினையை முடிப்பது இந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள சீர்திருத்தங்களில் ஒன்றாகும்.
இதை தவிர, பல்வேறு நடவடிக்கைகளுக்காக வணிகங்களால் பெறப்பட்ட பதிவுச் சான்றிதழ்கள் / ஒப்புதல்கள் / உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான தேவைகளை நீக்குவதும் இதன் ஒரு பகுதியாகும். குறைந்தபட்சம் மத்திய அரசால் குறிப்பிடப்பட்ட சில சட்டங்களின் கீழ் இதனை சாத்தியப்படுத்தினால் கூடுதல் கடன் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
தொடர் வீழ்ச்சியில் இந்திய பொருளாதாரம் – கொரோனாவே காரணம் என்கிறது மத்திய அரசு
“இதுவரை 5 மாநிலங்கள் எளிதாகத் தொழில் செய்யும் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட சீர்திருத்தங்களை நிறைவு செய்துள்ளன. எனவே, திறந்த சந்தை கடன் மூலம் 16,728 கோடி ரூபாய்க்கு கூடுதல் நிதி ஆதாரங்களை திரட்ட இந்த மாநிலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த நன்மைகளைப் பெற 2020-ம் ஆண்டு பிப்ரவரி 15 க்குள் – ‘ஒரு தேசம், ஒரு ரேஷன் அட்டை’ முறையைச் செயல்படுத்துதல், எளிதாகத் தொழில் செய்யும் திட்டத்தில் திருத்தம் செய்தல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு / பயன்பாட்டு சீர்திருத்தங்கள் மற்றும் மின் துறை சீர்திருத்தங்கள் ஆகிய நான்கு சீர்திருத்தங்களைக் கொண்டவர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.