Aran Sei

போலிக் கணக்கு மோசடி – பிரபல நிறுவனத்தின் இயக்குநர் கைது

credit : nationalbussinessmirror.com

அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் ரூ.25.25 கோடி மோசடியில் ஈடுபட்டதற்காக பென்டியம் இன்போடெக் மற்றும் ஹிரக் பயோடெக் நிறுவனத்தின் இயக்குநர் நிகிடா பல்தேவ்பாய் தேவ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நான்கு நாள் காவல் விசாரணைக்கு எடுத்து அமலாக்கத் துறையினர் விசாரித்து வருகின்றனர். காந்திநகர் சிஐடி-குற்றப்பிரிவு நடத்திய விசாரணையைச் சார்ந்து இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. தேவ், பிரதிக் மற்றும் பலர் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பல்தேவ்பாய் நிலை வைப்புத்தொகை மூலம் ஓவர்டிராஃப்ட் கணக்கு தொடங்கி பணம் திருப்பிச் செலுத்துவதில் ரூ.25.25 கோடி கூட்டுறவு வங்கியில் மோசடி செய்துள்ளதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர். 20 வட்டி வழங்கும் வங்கிக் கணக்குகளை அலுவலகப் பணியாளர் பெயரிலும் நிறுவனங்களின் பெயரிலும் உருவாக்கி ஒவ்வொரு கணக்கிலும் ரூ.50 லட்சம் செலுத்தியிருக்கிறார்.

தேவ் இயக்குநர், உரிமையாளர், பங்குதாரர் போன்ற பொறுப்புகளின் மூலம் 20 வங்கிக் கணக்குகளில் 7 கணக்குகளுக்குக் கடன் விண்ணப்பித்துள்ளார்.

எஸ்ஜே செக்யுரிடிஸ், பயோநீர் மெர்கன்டைல் லிமிடெட், விட்டாலே பயோசயின்ஸ் லிமிடெட், சடர்க் ரியல் எஸ்டேட் லிமிடெட், ஜுபிட்டர் பிசினெஸ் லிமிடெட், லக்ஷயா செக்யுரிடிஸ் கிரெடிட் ஹோல்டிங் லிமிடெட் மற்றும் அரிஹந்த் ஜுவல்லர்ஸ் போன்ற நிறுவங்களின் பெயர்களில் இந்தக் கடன் விண்ணப்பம் இணைக்கப்பட்டுள்ளது.

ஹிரக் பயோடெக் நிறுவனத்தின் இயக்குநர்கள் இருவரும் பிப்ரவரி 25 அன்று ஒரு தீர்மானம் போட்டுள்ளனர். அதன்படி தேவ்க்கு விவசாயமல்லாத நிலங்கள் தொடர்பான எந்தப் பரிவர்த்தனையிலும் நிறுவனத்தின் பெயரில் தலையிடும் அதிகாரம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தத் தீர்மானத்தை வைத்து மார்ச் மாதம் யாருடைய ஒப்புதலும் இல்லாமல் சொத்துகளை விற்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்