“பொருளாதாரச் செயல்பாட்டை வாய்ப்பேச்சினால் மட்டும் முடுக்கி விட முடியாது, பொருளாதாரம் என்பது சர்க்கஸ் ரிங் மாஸ்டரின் கையில் இருக்கும் கம்புக்கு ஆடும் சிங்கம் போன்றது இல்லை” என்று காங்கிரஸ் தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
All three have tried to “talk up” the economy. I wish the economy was a circus lion that would respond to the stick of the ringmaster !
— P. Chidambaram (@PChidambaram_IN) October 22, 2020
“ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், செபி சேர்மன், பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் மூவரும் ஒரே நாளில் ஒரே பிரச்சனையைப் பற்றிப் பேசுவது ஆச்சரியமாக இல்லையா?” என்று சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.
Is it not intriguing that @DasShaktikanta, the SEBI Chairman and the DEA Secretary should speak on the same day on the same subject ?
— P. Chidambaram (@PChidambaram_IN) October 22, 2020
புதன் கிழமை அன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், “இந்தியா ஒரு பொருளாதார மீட்சியின் தொடக்கத்தில் உள்ளது. ரிசர்வ் வங்கி பின்பற்றிய தாராளமான நிதியியல் கொள்கையும் மத்திய அரசு பின்பற்றும் தாராளமான செலவினக் கொள்கைகளும் இதற்கு அடிப்படையாக உள்ளன” என்று கூறியிருந்தார் என்று என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
புதன் கிழமை அன்றே, செபி சேர்மன் அஜய் தியாகி பொருளாதாரத்தில் சில நேர்மறை அம்சங்கள் இருப்பதாகவும், மூலதனச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள மீட்சி பரந்து பட்டதாக உள்ளதாகவும் கூறியிருந்தார். பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் தருண் பஜாஜ் முதலீடுகளை ஈர்ப்பது பற்றிப் பேசியிருந்தார்.
இதற்கு, ப.சிதம்பரம் “பொருளாதாரம் பெரும்பாலும் சந்தையாலும், வேண்டல் வழங்கல் விதிகளாலும், வாங்கும் சக்தியாலும், மக்களின் உணர்வு நிலையாலும் தீர்மானிக்கப்படுகிறது” என்று பதில் அளித்துள்ளார்.
The economy is largely determined by the market, by the laws of demand and supply, and by the purchasing power and sentiments of the people.
— P. Chidambaram (@PChidambaram_IN) October 22, 2020
“இந்த மூன்று நிபுணர்களும் நிதி அமைச்சரிடம் ஒரே குரலில் சொல்ல வேண்டியது என்னவென்றால், பெரும்பான்மை மக்கள் கையில் பணம் இல்லை அல்லது பொருட்களையும் சேவைகளையும் வாங்கும் மனம் இல்லை.” என்று ப.சிதம்பரம் ட்வீட் செய்திருக்கிறார்.
The three distinguished men should tell the FM, in unison, that the vast majority of the people do not have the money or the inclination to buy goods and services
— P. Chidambaram (@PChidambaram_IN) October 22, 2020
“நான் சொல்வதில் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் பீகாரில் வாக்காளர்களின் குரல்களைக் கேளுங்கள். அவர்கள் தமது வாழ்வாதார நெருக்கடி பற்றிச் சொல்கிறார்கள் – வேலை இல்லை அல்லது போதுமான வேலை வாய்ப்பு இல்லை, வருமானம் இல்லை அல்லது சொற்ப வருமானம்தான் உள்ளது, அவர்களது எண்ணமெல்லாம் எப்படி தாக்குப் பிடிப்பது என்பதில்தான் இருக்கிறதே தவிர, செலவழிப்பதில் இல்லை” என்றும் சிதம்பரம் கருத்து கூறியிருக்கிறார்.
If you doubt what I say, just listen to the voices of the voters of Bihar on their existential crisis — no work or not enough work, no income or little income, and their thoughts are on surviving, not on spending@nsitharaman @FinMinIndia
— P. Chidambaram (@PChidambaram_IN) October 22, 2020
“அடித்தட்டு 50% குடும்பங்களின் கையில் பணம் சேர்வதையும், ஏழைகளின் தட்டுகளில் உணவு கிடைப்பதையும் அரசு உறுதி செய்யாவிட்டால், பொருளாதாரம் சிறந்த முறையில் மீட்சி அடையாது” என்று பொருளாதார மீட்சிக்கான வழியாக ப.சிதம்பரம் கூறியிருக்கிறார்.
Unless the government puts money in the hands of the bottom half of the families and puts food on the plates of the poor, the economy will not revive smartly.
— P. Chidambaram (@PChidambaram_IN) October 22, 2020
ஏப்ரல் தொடங்கி ஜூன் முடிந்த காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் உலகின் பெரிய பொருளாதாரங்களில் மிக மோசமான அளவு சுருங்கியது. இந்தியப் பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முந்தைய ஆண்டின் அதே காலகட்டத்தை விட 23.9% குறைந்திருந்தது.
2020-21 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 10% அளவுக்குச் சுருங்கும் என்று ஐஎம்எப் கணித்திருக்கிறது.
கொரோனா பொது முடக்கத்திலிருந்து மீள்வதற்கான இந்திய அரசின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லை என்று பொருளாதார அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.
‘கொரோனா கால மீட்பு நிதியில் திருப்தியில்லை’ – பிரிக்வர்க் ரேட்டிங்ஸ்
இந்தியாவின் ஒரு நபருக்கான ஆண்டு வருமானம் வங்க தேசத்தை விட பின்தங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐஎம்எப் கணித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தனிநபர் வருமானம் – இந்தியாவை முந்துகிறது வங்கதேசம் : ஐஎம்எப்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.