Aran Sei

கொரோனா நோய்த்தொற்று காலம் – சீனாவில் அதிகரித்த சூப்பர் பணக்காரர்கள்

அலிபாபாவின் ஜாக்கி மா, டென் சென்ட் போனி மா - image credit : fortune.com

சீனாவின் பெரும் பணக்காரர்கள் இந்த கொரானா பெருந்தொற்றின் காலத்தில் $1.5 லட்சம் கோடிக்கு மேல் சம்பாதித்து மேலும் பணக்காரர்கள் ஆனதாக, பணக்காரர்கள் ஆண்டு பட்டியல் ஒன்று கூறுவதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் பெரும் பணக்காரர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த கொரானா பெருந்தொற்று காலத்தில் சம்பாதித்துள்ளனர். இந்த நோய்த் தொற்றினால் போடப்பட்ட ஊரடங்கு காலத்தில் அசுர வளர்ச்சியை அடைந்த ஆன்லைன் வர்த்தகமும் ஆன்லைன் விளையாட்டும் அவர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்கியிருக்கின்றன என்று அறிவித்திருக்கிறது பணக்காரர்கள் ஆண்டு பட்டியல் ஹூருவன்.

உலகின் இரண்டாம் மிகப்பெரிய பொருளாதாரமான சீனாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைந்து கொண்டிருந்த சூப்பர் பணக்காரர்கள் பட்டியலில் இந்த ஆண்டு புதிதாக 257 நபர்கள் இணைந்துள்ளனர் என்கிறது அதை ஆய்வு செய்யும் ஹூருவன் அறிக்கை. சீனாவில் தற்போது மொத்த 878 சூப்பர் பணக்காரர்கள் இருக்கின்றனர் என்கிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த 626 நபர்கள் மேல்தட்டு வரிசையில் இருந்தனர் என்று ஹுருவன் பிப்ரவரியில் வெளியிட்டிருந்த உலகளாவிய பட்டியலில் குறிப்பிட்டிருந்தது.

ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட்ப்பட்ட பட்டியலில், சீனாவில் 2000-க்கும் மேற்பட்டோர் $30 கோடி (சுமார் ரூ 2,250 கோடி) அளவுக்கு சொத்து வைத்திருந்ததாகக் கூறுகிறது. இவர்களுடைய மொத்த நிகர மதிப்பு $4 லட்சம் கோடியை (சுமார் ரூ 300 லட்சம் கோடி) தாண்டுகிறது

ஆன்லைன் வர்த்தகத்தின் ஜாம்பவானான அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் ஜாக்கி மா கோடீஸ்வரர் பட்டியலில் மீண்டும் தன்னுடைய முதல் இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார். இந்த பெருந்தொற்றின் காலத்தில் ஆன்லைன் வியாபாரம் பெரும் வளர்ச்சியை கண்டதால் இந்தக் காலத்தில் மட்டும் அவருடைய சொத்து மதிப்பு 45% உயர்ந்து $58,800 கோடி (சுமார் ரூ 44.10 லட்சம் கோடி) ஆனது.

அவரைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் இருப்பது விளையாட்டு நிறுவனங்களின் ஜாம்பாவனான டென்சென்ட் நிறுவனத்தின் தலைவர் போனி மா. தேசிய பாதுகாப்பிற்க்கு அச்சம் விளைவிப்பதாக அந்த நிறுவனத்தின் விளையாட்டுக்கள் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டாலும் அவருடைய சொத்து மதிப்பு இந்த பெருந்தொற்றின் காலத்தில் 50% அதிகரித்துள்ளது. அவருடைய சொத்து மதிப்பு சுமார் $57,500 கோடி (சுமார் ரூ 43.12 லட்சம் கோடி) ஆகும்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்