Aran Sei

சீனாவில் கடுமையான மின் தட்டுப்பாடு – ஆசிய பொருளாதாரம் சரிவை சந்திக்கும் என்று கணிப்பு

Credits : The Economic Times

சீனாவில் நிலவும் மின் தட்டுப்பாட்டால், ஆசியாவின் பொருளாதாரம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக கடுமையாக பாதிக்கப்படும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சீனாவில் நிலக்கரி மற்றும் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்தது மின்சார  தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சீன தொழிற்சாலைகள் பல, தனது உற்பத்தியை வெகுவாக குறைத்துள்ளன. சில நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியையே முற்றிலுமாக நிறுத்தி வைத்துள்ளன.

ஒரு தொழிற்சாலை அல்லது நிறுவனம் எவ்வளவு மின்சாரத்தை உபயோகிக்க வேண்டும் என சீன அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பெரும்பாலான நிறுவனங்கள் கடைப்பிடிக்காததால், தற்போது மின்சார பயன்பாட்டை குறைக்க வேண்டிய நிர்பந்தத்தில் சிக்கியுள்ளன. சீனாவின் பொருளாதாரத்திலும் உள்நாட்டு உற்பத்தியிலும் மூன்றாவது இடத்தை பிடிக்கும் ஜியாங்சு, செஜியாங், குவாங்டாங் எனும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகள் தான் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அனல் மின் நிலையங்களால் ஏற்படும் பேரிழப்பு – C40 நகரங்கள் அமைப்பின் அறிக்கை

மின் தட்டுப்பாட்டால் பல தொழில்கள் பாதிக்கப்பட்டிருப்பதை போல, பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குவாங்டாங் பகுதியில் இருக்கும் தொழிற்சாலைகளில் மின்சார தடைபட்டிருப்பது போல, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இயற்கையான வெளிச்சத்தை மட்டுமே பயன்படுத்தவும், குளிர்சாதன பெட்டிகள் பயன்படுத்தக் கூடாது எனவும் சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

’சீனா என்ற வார்த்தையை உச்சரிக்க அஞ்சுகிறாரா பிரதமர் மோடி?’ – கார்த்திக் சிதம்பரம்

மின்சார உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள், துறைமுகங்கள் வாயிலாக சீனாவுக்கு கொண்டு வரப்படுகிறது. அதில் ஏற்பட்டிருக்கும் சிக்கலே, மின்சார தட்டுப்பாட்டுக்கு அடிப்படை காரணமாக பார்க்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று பரவலால், உலகத்தின் மிகவும் பரபரப்பான துறைமுகமாக பார்க்கப்படும் நிங்போ துறைமுகம் செயலற்று உள்ளது. மேலும் ஷென்சனில் இருக்கும் யான்ஷியன் துறைமுகமும் கடந்த மே மாதத்தில் இருந்து செயலற்று இருக்கிறது. இதனால் விநியோகச் சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் சீன தொலைகாட்சிக்குத் தடை – பதிலடியாக பிபிசிக்கு தடைவிதித்த சீனா

இது தொடர்பாக சீனாவின் பிரபல பொருளாதார நிபுணரான லு டிங், ”சீனாவில் இருந்து உற்பத்தியாகும் ஆடைகள், பொம்மைகள், இயந்திர பாகங்கள் உள்ளிட்டவையில் ஒரு கடுமையான தட்டுப்பாட்டை சர்வதேச சந்தைகள் எதிர்கொள்ள உள்ளன. இனி சீனாவை பற்றிய பரபரப்பான செய்தி, மின் தட்டுப்பாடு தொடர்பாகத் தான் இருக்கப் போகிறது” என்று தெரிவித்துள்ளார்.

SOURCE : BLOOMBERG QUINT

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்