Aran Sei

வெறிச்சோடும் மெட்ரோ: சேவையை குறைக்க திட்டம்

Image Credits: Chennai Metro

45 கி.மீ தூரம் பயணிக்கும் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை இன்னும் குறைவாகவே உள்ளது. ஆகையால், மெட்ரோ ரயில் நிர்வாகம், இரண்டு ரயில்களுக்கு இடையிலான கால இடைவெளியை உயர்த்தவுள்ளது.

செப்டம்பர் 7-ம் தேதி ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கியபோது, ​​பயணிகள் வேலை நேரங்களில் அதிகபட்சம் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறையும், மற்ற நேரங்களில் ஏழு நிமிடங்களுக்கும் ஒரு முறையும் ரயிலில் ஏறலாம்.

சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம், ரயில் பயணங்களுக்கு இடையிலான கால அளவை உயர்த்த முற்படுவதாகவும், வேலை நேரங்களில் 7 நிமிடங்களுக்கு ஒரு முறை, மற்ற நேரங்களில் 14 நிமிடங்களுக்கு ஒரு முறை எனும் அடிப்படையில் ரயில்கள் இயங்கவுள்ளதாகவும், தி இந்துவில் செய்தி வெளியாகியுள்ளது.

“வேலை நேரங்களில் 5 நிமிடங்களுக்கும் ஒரு முறையும், மற்ற நேரங்களில் 14 நிமிடங்களுக்கு ஒரு முறையும் தொடர்ந்து ரயில்களை இயக்கும் மற்றொரு யோசனையும் எங்களிடம் உள்ளது. வேலையற்ற நேரங்களில், எந்தவிதமான போக்குவரத்தும் இல்லாமல், ரயில்கள் மிகக் குறைந்த பயணிகளுடன் ஓடுவதுதான் இம்முடிவிற்கான காரணம்,” என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

வார நாட்களில் மெட்ரோ ரயில்களில் சுமார் 18,000-20,000 பயணிகள் பயணிக்கின்றனர், இந்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமைகளில் 10,000 ஆகக் குறைகிறது.

ஞாயிற்றுக்கிழமைகளில் 50% தள்ளுபடி மற்றும் வார நாட்களில் கியூஆர் குறியீடு பயணசீட்டுகளுக்கு 20% தள்ளுபடி வழங்கப்படும்போதும் இந்நிலை தொடர்கிறது என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்தபடி வேலை செய்வதின் விளைவா?

“எங்கள் ரயில்களில் பயணிக்கும் பலர் பணிகளில் உள்ள தொழில் வல்லுநர்கள். பெரும்பாலான அலுவலகப் பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதாலும், பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவதில் பலருக்கும் அச்சம் இருப்பதாலும், போக்குவரத்து இப்போது குறைந்துள்ளது. பணியாளர்கள் மீண்டும் அலுவலகங்களுக்கு திரும்பும்போது, போக்குவரத்து, பொதுமுடக்கத்துக்கு முன்னர் இருந்தது போலவே ஒரு லட்சம் எண்ணிக்கையை எட்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். வரும் மாதங்களில் போக்குவரத்துக்கு மேம்பட்டால், நாங்கள் நிச்சயமாக அதிகமான சேவைகளை இயக்குவோம்,” என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.

தற்போது, ​​சென்னை மெட்ரோ நாள் ஒன்றிற்கு 450 முறை ரயில்களை இயக்குகின்றது. பயணங்களுக்கு இடையிலான கால அளவை உயர்த்துவதால், பயணங்களின் எண்ணிக்கை குறையக்கூடும், இதனால் செலவினங்களைக் குறைக்கலாம் என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளின் ஒவ்வொரு மணி நேரமும் போக்குவரத்து முறையை பகுப்பாய்வு செய்வதற்கான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அரண்செய்யுடன் பேசிய மெட்ரோ பயனாளி அரவிந் “ஆரம்பித்திலிருந்தே மெட்ரோ கட்டணங்கள் அதிகமாக உள்ளன. அலுவலகத்துக்கு சென்று வரும் தொழிலாளர்களின் சம்பளம் கூட பெரும்பாலும் குறைக்கப்பட்டிருப்பதால், அவர்கள் மெட்ரோ கட்டணத்தை வீண் செலவாக நினைக்கிறார்கள்,” என்று கூறினார்.

“ஆரம்பத்தில் நான் மெட்ரோ ரயில்கள் பயன்படுத்தும் பொது, சரியான வழிபலகைகள் இல்லாத காரணத்தால் எனக்கு வழியைக் கண்டறிவது சிரமமாக இருந்தது. இதே காரணத்தால் தான் ஒரு முறை வந்த சிலர் மறுமுறை வர தயங்குகிறார்கள்” என்றும் அவர் கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்